பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணிகள் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த 27 தொகுதிகளில் கடந்த முறை 19த் தொகுதிகளில் அதிமுகவே நேரடியாக களம் கண்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அதிமுக தோல்வி அடைந்த தொகுதிகளை தான் பாஜகவுக்கு ஒதுக்கி உள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் 27 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜகவும், இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுகவும் வென்றது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. லேட்டாக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தாலும் திமுகவுக்கு முன்னதாகவே முடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
திமுகவில் இன்னும் முழுமையாக கூட்டணி பங்கீடு முடியாத நிலையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததோடு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டார்.

தொகுதி பட்டியல்
தற்போதைய சூழலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகளும், வழங்கப்பட்டுள்ளது. ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஐந்து தொகுதிகள், ஐஜேகேவுக்கு இரண்டு தொகுதிகள், தமமுகவுக்கு ஒரு தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. வழக்கம் போல மேற்கு மண்டலம், டெல்டா, தென் மாவட்டங்களின் அதிமுக பலமாக இருக்கும் தொகுதிகளில் தான் இந்த முறையும் அதிமுக போட்டியிடுகிறது.அதே நேரத்தில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் தற்போது பல தொகுதிகள் பாஜகவுக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அவிநாசி உள்ளிட்ட அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதிகளையும் பாஜகவுக்கு வழங்கிவிட்டார் எடப்பாடி என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
பாஜக 27 தொகுதிகள்
அதே நேரத்தில் இதில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் எடப்பாடி என்று தான் சொல்ல வேண்டும். சொல்லப் போனால் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அதிமுக இதுவரை ஜெயிக்காத தொகுதிகள் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதிமுக சார்பில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 27 தொகுதிகளில் கடந்த முறை 19 தொகுதிகளில் அதிமுகவே நேரடியாக களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
2021 சட்டமன்ற தேர்தல்
தற்போது 27 தொகுதிகளில் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் கோவை வடக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக கடந்த தேர்தலில் வென்றது. மற்ற 2 தொகுதிகளில் தான் அதிமுக வென்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் தளி, மொடாக்குறிச்சி, உதகமண்டலம், நாகர்கோவில், விளவங்கோடு, திருவண்ணாமலை, ராமநாதபுரம் ,குளச்சல் உள்ளிட்ட எட்டு தொகுதிகள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக தோற்ற தொகுதிகள்
இப்படி கடந்த தேர்தலில் அதிமுக தோற்ற தொகுதிகளை தான் பாஜகவுக்கு ஒதுக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், கடந்த முறை தேர்தலில் அதிமுக போட்டியிட்டு தோல்வியடைந்த பெரும்பாலான தொகுதிகள் தான் பாஜக மட்டுமல்லாமல், அவர்களது கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications