Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்
சென்னை: காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ள திமுக, அடுத்தகட்டமாக பேச்சுவார்த்தைகளை துவக்கவுள்ளது. இந்நிலையில், மநீம பொதுக்குழுவில் பேசி முடிக்கப்பட்டது போல திமுக தலைமையிடம் 6 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், ஆனால் இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. இதனால், கிடைக்கும் எண்ணிக்கையில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் கமல் உறுதியாக உள்ளாராம்.
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் களம் எப்போதுமே உட்சபட்ச ஹீட்டில் தான் இருக்கும். அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வெற்றி பெற பாஜக அதிதீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில் 2026 தமிழக தேர்தல் களம் கொதிநிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது.
கூட்டணி கணக்குகள் கிளைமேக்ஸை அடைந்து கிட்டத்தட்ட அணிகள் முடிவாகியுள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கின்றன. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை யார் முடிவு செய்வது என்பதிலேயே குழப்பம் நீடித்து வருகிறது.

திமுக கூட்டணி
இந்த நிலையில் திமுக முகாம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கும் நிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் சலசலப்பு ஏற்பட்டாலும், அண்மையில் நடைபெற்ற சிதம்பரம்-ஸ்டாலின் சந்திப்பு அந்த சலசலப்பு சத்தத்தை ஓய வைத்து கூட்டணியை இறுதி செய்துள்ளது. கூட்டணி கட்சிகளின் பலமறிந்து அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதிலும், யாரையும் அண்டர் எஸ்டிமேட் செய்து விடக் கூடாது என்பதிலும் திமுக தலைமை மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யமும் திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம்
நேற்று திமுக குழுவுடன் மநீம குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம், தொகுதி பங்கீடு விவகாரத்தை கோழி அடை காப்பது போல காத்து வருகிறோம் என்றும், குஞ்சு பொரித்து வரும் போது எத்தைன தொகுதிகள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.
தொகுதி பங்கீடு
நாம் விசாரித்த வரை மநீம சார்பில் ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஆறு தொகுதிகளை திமுக ஒதுக்குமா என்று தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் இரண்டு தொகுதிகள் மநீம-வுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையாவது கேட்டு பெற்றிட வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்.
சாதகமான தொகுதி
குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், வேளச்சேரி தொகுதிகளும், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், மதுரை மத்தி, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள் கமலின் விருப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், கூறப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கையில் மேலே சொன்ன சாதகமான தொகுதிகளையாவது கேட்டுப் பெற்றிட வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
சினேகன்
மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் யார் என்ற தேர்வும் விறுவிறுப்பாகவே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மநீம சார்பில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா, திரைப்பட பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட வெகு சிலரின் பெயர்கள் ஸ்ட்ராங்காக அடிபடுகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கமல் ராஜ்யசபா எம்பியாகிவிட்ட நிலையில், சட்டமன்றத்திலும், மநீம குரல் ஒலிக்க வேண்டும் என கமல் நினைக்கிறார்.
கமல் ஹாசன்
அதற்காக சில சமரசங்களை செய்ய வேண்டி வந்தாலும், அதற்கும் அவர் தயாராகவே இருப்பதாக தெரிகிறது. சர்வைவல் ஆஃப் பிட்டஸ்ட் என்ற தத்துவத்தின் பேரில் நாங்கள் இருவரும் டார்வின் கோத்திரம்... வி வில் சர்வைவ் அண்ட் வி வில் கண்டின்யூ என்ற கமலின் குரல் அவர் சமரசங்களுக்கு தயாராக இருப்பதையே காட்டுகிறது.
-
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! -
சென்னையில் களம் காணும் 419 வேட்பாளர்கள்! அதிகபட்ச எண்ணிக்கையில் விஜய்யின் பெரம்பூர்தான் டாப்! -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
தவெகவினரை தெறித்து ஓடவிட்ட திலகபாமா! பெரம்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்.. தேர்தல் சலசலப்பு! -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?












Click it and Unblock the Notifications