லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் கனிமொழி உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் அவருக்காக விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் கனிமொழிக்கு கிடைத்து வரும் வரவேற்பு அவரை மாநில அரசியலில் களம் இறங்க ஊக்குவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கனிமொழியின் லோக்கல் அரசியல் பிரவேசத்தை 'சிலர்' விரும்பவில்லை என்றும், இது 'சிலரது' அரசியல் எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்களாம். இந்நிலையில் கனிமொழி குறித்து 'உடன்பிறப்பு' எவ்வித சிக்னலும் கொடுக்கவில்லையாம்.!
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 சட்டமன்ற தேர்தல் சென்று கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேமுதிக. கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக இந்த கூட்டணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், ராமதாஸ்- சசிகலா ஆகிய 5 அணிகளுக்கிடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உள்ளது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
திமுக ஏற்கனவே கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த முறையும் பெரிய கூட்டணிப் பலத்துடன் தேர்தலை சந்திக்கத் திமுக முயற்சி செய்து வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், தவாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவும் உள்ளது.
கனிமொழி தூத்துக்குடி
மேலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த திமுக தலைமையிலான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமை தாங்கும் இந்த குழுவில், ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட பல அமைச்சர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். கூட்டணி பேச்சு, வேட்பாளர் நேர்காணல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் கனிமொழி உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைமை
அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் அவருக்காக விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் கனிமொழிக்கு கிடைத்து வரும் வரவேற்பு அவரை மாநில அரசியலில் களம் இறங்க ஊக்குவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகவும், திமுக தென்மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் கனிமொழி, கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் முக்கிய முடிவுகளில் நேரடியாக பங்கெடுத்து வருகிறார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி
குறிப்பாக காங்கிரஸ் - திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்ட நேரத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஒப்பந்தத்தை உறுதி செய்ய முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. டெல்லி அரசியலில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தாலும், தற்போது மாநில அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் கனிமொழிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
திமுக விருப்ப மனு
ஒன்று, டெல்லியில் அவருடைய செல்வாக்கு குறையக்கூடும் என்ற அரசியல் பேச்சுகள். மற்றொன்று, தமிழகத்தில் அவருக்கு கிடைத்து வரும் அதிக வரவேற்பு. இந்நிலையில், தென் மாவட்ட நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கனிமொழியை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டபோது, பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் கனிமொழிக்காக விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் கனிமொழி
ஸ்டாலின் கனிமொழி
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி முதல் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கியுள்ளார். இந்த நேர்காணலுக்கு முன்பாக தென் மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் இருப்பதை தனது அண்ணனும் முதல்வருமான ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் கனிமொழியின் இந்த அரசியல் முயற்சி குறித்து திமுக தலைமை ஏற்கனவே அறிந்திருந்ததாகவும், அவரை டெல்லி அரசியலின் முக்கிய முகமாக வைத்திருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைமை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால தலைமை
அதனால் மாநில அரசியலில் அவர் நேரடியாக ஈடுபடாமல் இருக்க சில அழுத்தங்கள் உருவாகியுள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது. மேலும், கனிமொழி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானால், 'சிலரது' எதிர்கால அரசியல் வாழ்வில் சிக்கல் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் 'எதிர்கால தலைமையை' சுற்றிய அரசியல் கணக்குகளும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு vs டெல்லி
இந்நிலையில் திருச்செந்தூர், பாளையம்கோட்டை, விருதுநகர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட சில தொகுதிகளை கனிமொழி தனக்காக தயார்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை திமுக தலைமை எந்தத் தொகுதியிலும் அவருக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கனிமொழி மாநில அரசியலில் களம் இறங்குவாரா அல்லது டெல்லி அரசியலிலேயே தொடருவாரா என்ற கேள்வி தற்போது திமுக வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்?













Click it and Unblock the Notifications