Election Exclusive: எம்ஜிஆர் அதிமுக.. தவெக கிளைக் கழகமாமே! பண்ருட்டி போட்ட பலே ப்ளான்! உடனே ஓகே சொன்ன விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முன்னாள் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகி 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த முடிவின் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகம் இருக்கலாம் என்ற அரசியல் பேச்சு உருவாகியுள்ளது. காரணம் நேற்றை பேச்சின் போது விஜய்க்கும் - திமுகவுக்கும் இடையே தான் போட்டி என கூறியுள்ளதன் மூலம் விரைவில் அவர் கட்சி ஆரம்பித்ததன் பின்னணியில் விஜய் தான் உள்ளனர் என்கின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் தனது அரசியல் பயணத்தில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். நீண்ட காலமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமாக இருந்து அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர், தற்போது அந்த அணியிலிருந்து விலகி தனிக் கட்சி அமைத்துள்ளார்.

'எம்ஜிஆர் அதிமுக' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த புதிய அரசியல் அமைப்பின் கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களை கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தாரக மந்திரமாக "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வாசகம் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 vijay

பண்ருட்டி ராமச்சந்திரன்

அரசியல் குறித்து பேசும்போது, தனிநபரை மையமாக வைத்து அரசியல் செய்ய முடியாது என்ற கருத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அரசியல் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் முக்கிய போட்டி திமுக மற்றும் விஜய் தலைமையிலான அணிக்கிடையே இருக்கும் என்ற கருத்தும் அவர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் அதிமுக

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக செயலில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் தலைவர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் அவர் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் படி, ஓபிஎஸ் அணியில் இருந்த சிலர் புதிய அரசியல் மாற்றத்தை விரும்பியதாக கூறப்படுகிறது. அந்த சூழ்நிலையில்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக் கட்சி தொடங்கியுள்ளார் என்றும் பேசப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் விஜய் தலைமையிலான அரசியல் இயக்கத்துக்கு அவர் ஆதரவு அளிக்கக் கூடும் என்ற தகவலும் பரவி வருகிறது.

விஜய்

மேலும், இதன் பின்னணியில் விஜய் தான் இருக்கிறார் என்கின்றனர் தகவலறிந்த அரசியல் வட்டாரத்தினர். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மிகப்பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என கூறி வந்தார். காங்கிரஸ், டிடிவி தினகரன், தேமுதிக, சசிகலா, ஓ பன்னீர்செல்வம், ராமதாஸ் என பெரிய பட்டியலே இருந்தது. ஆனால் காங்கிரஸ் திமுக உடனான கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. தேமுதிகவும் திமுகவுடன் கூட்டணி சென்று விட்டது, தினகரன் அதிமுகவுக்கு சென்று நிலையில் ராமதாஸ் திமுகவை அணுகுவதாக சொல்லப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம்

இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வமும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். டெல்லிக்கு பயந்து திமுக அல்லது தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு செல்ல தயங்குவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தாவி விட்டு நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்தார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனின் பழுத்த அரசியல் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள விஜய் அவரை கட்சிக்கு அழைக்கின்றார். ஆனால் ஏற்கனவே பல கட்சிகளில் பயணித்தவர் என்ற விமர்சனம் இருப்பதால் தனியாக கட்சி தொடங்கி விஜய் உடன் கூட்டணி அமைக்கலாம் எனவும், விஜய்க்கு ஆலோசகராக அவர் பணியாற்றுவார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+