Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: மச்சான் மூலம் ரகசிய டீலிங்.. மதுரை அண்ணனின் மன்னன் அதிமுகவில் எப்படி? திரைமறைவில் நடந்த பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை அரசியலின் முக்கிய முகமாக பல ஆண்டுகள் திகழ்ந்து வந்த மு.க.அழகிரியின் ஆதரவாளரான பி.எம்.மன்னன் நேற்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். மதுரை அரசியலில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த மன்னனின் வருகை அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என்கின்றனர். இந்த நிலையில் நேரடியாகவே தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மன்னன் அதிமுகவில் சேர்ந்ததாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது கூட, அழகிரி அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இருப்பினும், பல மாதங்கள் கடந்தும் எந்த பதிலும் கிடைக்காததால், அந்த அணியில் விரக்தி அதிகரித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 mk alagiri dmk

அழகிரி ஆதரவாளர்

இந்த சூழலில், அழகிரியின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் முன்னாள் மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்திருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த மன்னன், திமுகவில் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மு.க.அழகிரி ஒருகாலத்தில் தென்மண்டல அமைப்பு செயலாளராக செயல்பட்டு, மதுரை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வலுவான ஆதரவை உருவாக்கியிருந்தார்.

பிஎம் மன்னன் அதிமுக

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் கணிசமாக இருந்தனர். கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், தலைமையிலான அதிகார மையமும் காரணமாக அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவருடன் தொடர்புடைய பல நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். அதன்பிறகு பல ஆண்டுகள் கடந்தும், திமுக அனுதாபிகளாகவே தாங்கள் இருப்பதாக அழகிரி அணியினர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

மதுரை அரசியல்

கட்சியில் மீண்டும் இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கட்சிக்குள் சில முக்கிய நிர்வாகிகள் இதற்கு விருப்பம் காட்டவில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் அரசியல் எதிர்காலம் குறித்து புதிய முடிவுகளை ஆராயத் தொடங்கினர். இந்த பின்னணியில், பி.எம்.மன்னன் அதிமுகவில் இணைந்த விதமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அவர் முதலில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான கேபி முனுசாமியை, தனது மைத்துனரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கட்சியின் உயர்மட்ட தலைமைத்துடன் ஆலோசனை நடைபெற்றது. வழக்கமாக மாவட்ட செயலாளர் மூலம் மட்டுமே கட்சியில் சேர்க்கை நடைபெறும், எனவே நடைமுறைப்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளரான செல்லூர் ராஜுவைச் சந்தித்த பிறகே மன்னன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 சட்டமன்ற தேர்தல்

மன்னனின் இந்த அரசியல் கட்சி தாவல், மதுரை மாவட்ட அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது தேர்தல் கணக்கீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியில் மிகப் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மதுரை அதிமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+