அறிவாலயம் பக்கம் போனா ஒரே அமுக்கு! சின்ன கட்சிகளையும் விட்டு வைக்காத திமுக! ஸ்டாலின் போட்ட ப்ளான்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை மிக சிரியஸாக எடுத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இருந்த நிலையில் தற்போது 21 கட்சிகள் கூட்டணியில் இணைந்து இருக்கிறது. கடந்தாண்டு திமுகவை நேருக்கு நேர் எதிர்த்த தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளோடு சிறிய சிறிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்திருக்கிறது. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என திட்டமிட்டு ஸ்டாலின் கூட்டணி கணக்குகளை போட்டு வருவதாக சொல்கின்றனர் அறிவாலய உடன்பிறப்புகள்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் தீவிரமாக கூட்டணி கணக்குகளை அமைத்து வருகிறார். 2021 தேர்தலில் 13 கட்சிகள் இருந்த திமுக கூட்டணி, தற்போது 21 கட்சிகளாக விரிந்துள்ளது.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற அணுகுமுறையுடன் சிறிய கட்சிகளையும் தவறாமல் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் திமுக தலைமையகம் செயல்படுகிறது என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி 2026
கடந்த ஆண்டு திமுகவை நேரடியாக எதிர்த்த தேமுதிக மற்றும் மநீம ஆகியவை இம்முறை கூட்டணியில் இணைந்துள்ளன. இதற்கு கூடுதலாக பல சிறிய கட்சிகளும் திமுக அணியில் சேர்ந்துள்ளன. இதனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சிக்கலாகியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நீண்டு வருகிறது. 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை அதற்கு மேலான தொகுதிகளை கோரியதாக கூறப்படுகிறது. 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலின் கூட்டணி கணக்கு
ஆனால் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் சீட் ஒதுக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஆரம்ப கட்டத்தில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடந்த ஆலோசனைகளில், 25 முதல் 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும், உள்ளாட்சி தேர்தல்களில் கூடுதல் பங்கு வழங்கலாம் என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சமரச முயற்சி பலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் திமுக
இதற்கிடையில், திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. ஓபிஎஸ் திமுகவிலேயே இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. அவருடன் முன்னாள் எம்பி ஓபி ரவீந்திரநாத் குமார், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்கள் கடந்த தேர்தல்களில் அவரவர் தொகுதில் வெற்றி பெற்று மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதால், இது திமுகவுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சிகள்
தற்போதைய சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் என பார்க்கும் போது, 1. திமுக, 2. காங்கிரஸ், 3. மதிமுக, 4. இந்திய கம்யூனிஸ்ட், 5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 6. விடுதலை சிறுத்தைகள்,
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, 9. மனிதநேய மக்கள் கட்சி, 10. அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகியவை உள்ளன.
வலுவான திமுக
மேலும், 11. தமிழக வாழ்வுரிமை கட்சி, 12. மக்கள் விடுதலை கட்சி, 13. ஆதித்தமிழர் பேரவை, 14. மக்கள் நீதி மய்யம், 15. தேமுதிக, 16. எஸ்டிபிஐ, 17. மனிதநேய ஜனநாயகக் கட்சி, 18. முக்குலத்தோர் புலிப்படை, 19. கொங்கு இளைஞர் பேரவை, 20. திராவிட வெற்றிக் கழகம், 21. புதிய திராவிட கழகம் ஆகியவை உள்ளன. இதில் பெரிய கட்சிகளுக்கு தலா 6 முதல் 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும். கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் திமுக சின்னத்திலேயே போட்டியிடவுள்ளனர். இதனால் திமுகவுக்கு பலம் தான் என்கின்றனர் அறிவாலய உடன்பிறப்புகள்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications