Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: கூட்டி கழிச்சு பார்த்த ஸ்டாலின்..30 தொகுதிகளில் 6 கட்சி! 60 சீட்டில் மொத்த கேம் ஓவர்! மாஸ்டர் ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து கடந்த பிப்ரவரி 22 முதல் தொடங்கிய ஆலோசனைகள், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய கவனம் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைச் சுற்றியே நிலவி வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட்டாக சில முடிவுகளை எடுத்துள்ள ஸ்டாலின் 30 தொகுதிகளுக்குள் 6 கட்சிகளை முடக்கியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கூட்டணியில் புதிய கட்சிகளாக தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.

இதனால் கடந்த 2021 தேர்தலை விட குறைந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், கூட்டணியில் முக்கிய பங்காற்றும் காங்கிரஸ் கட்சியுடன் நடைபெறும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK

திமுக கூட்டணி

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவும், காங்கிரஸ் தரப்பில் கிரீஷ் சோடங்கர் தலைமையிலான குழுவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் தரப்பில் கு. செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொகுதி பங்கீடு

பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள சூழலில், காங்கிரஸுக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கவே திமுக முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், காங்கிரஸ் தரப்பு அதிக இடங்களை கோரி 40 தொகுதிகள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் திமுக பேச்சுவார்த்தை

இறுதி முடிவாக காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும், அதனுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளுடன் இணைந்து, கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறு கட்சிகளுடனும் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தலைமையிலான குழு திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளது.

உதயசூரியன்

கடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், இந்த முறை இரண்டு தொகுதிகள் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவருக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகள்

மேலும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐந்து கட்சிகளும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ்

கூட்டணிக்குள் ஒருங்கிணைந்த போட்டி அமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளையும், புதிய கட்சிகளின் பங்கையும் கருத்தில் கொண்டு தொகுதிப் பங்கீடு அமைக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.க.ஸ்டாலின் திட்டம்

இதில் தான் தனது மாஸ்டர் மைண்டை பயன்படுத்தி இருக்கிறார் திமுக மு க ஸ்டாலின். ஆறு கட்சிகளை வெறும் 30 தொகுதிக்குள் முடக்கி இருப்பதோடு அவற்றிலும் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். இதன் மூலம் திமுகவுக்கு பெரும் பலம் கிடைக்கும். மேலும் மீதமுள்ள 24 தொகுதிகளில் முப்பது தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கினால் 174 தொகுதிகளில் திமுக நிற்கும். இதன் மூலம் கிட்டத்தட்ட 180 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+