Election Exclusive: ஸ்டாலின் கொடுத்தது 5,000.. 12,000ஐ அக்கவுண்டில் போட போகும் மோடி? அமித் ஷா மீட்டிங்கில் கசிந்த தகவல்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு மேற்கொண்ட சமீபத்திய வருகை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. திருச்சியில் நடைபெற்ற இந்த பயணத்தின் போது, மாநில அரசியல் நிலவரம், கூட்டணி அமைப்பு, தேர்தல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென சிலர் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் மத்திய அரசு 12,000 ரூபாய் வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என தகவல் கசிந்துள்ளது.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்த அமித் ஷாவிற்கு திருச்சி விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு நடைபெற்ற பாஜக மையக் குழுக் கூட்டத்தில் மாநில அரசியல் சூழல், தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு, பிரச்சார யுக்திகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. அப்போது அமித்ஷா பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளனர்.

அமித் ஷா தமிழ்நாடு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மேலிடப் பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் கட்சி வலுவூட்டும் திட்டங்கள் மற்றும் தேர்தல் முன்னெடுப்புகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பாஜக தேர்தல் யுக்தி
அடுத்த நாள் காலை அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் பகுதிக்கு பயணம் செய்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் புதுச்சேரி மாநிலத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாலை மீண்டும் திருச்சிக்கு திரும்பிய அவர் அங்கிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்த வருகையின் போது, தமிழகத்தில் உள்ள அவருக்கு நெருக்கமான சிலர் தேர்தல் நிலவரம் குறித்து தனிப்பட்ட ஆலோசனையும் நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசின் சமீபத்திய நலத்திட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரடி நிதி பரிமாற்றம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு ஒருமுறை ரூ.5,000 வழங்கியிருப்பது மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், தேர்தலுக்கு பின் மாதாந்திர உதவி தொகையை உயர்த்துவதாக அறிவித்திருப்பதும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், மத்திய அரசும் தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 தேர்தல்
இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டால் அது பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு தேர்தலில் சாதகமான சூழலை உருவாக்கும் என ஆலோசனையில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் அரசியல் தீவிரமடைந்து வரும் நிலையில், தேசிய மட்ட தலைவர்களின் நேரடி ஆலோசனைகள் கட்சி அமைப்பை சுறுசுறுப்பாக்கும் நோக்கத்துடன் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. குறிப்பாக மத்திய மட்டத்தில் இருந்து தேர்தல் திட்டமிடல் நடைபெறுவது, வரவிருக்கும் தேர்தலை கட்சிகள் முக்கிய அரசியல் போட்டியாகக் கருதுகின்றன என்பதை காட்டுகின்றன.
12,000 நிதியுதவி
இந்த நிலையில் தான் தற்போது பாஜக வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்து கொண்டுள்ளது. அதாவது இதுவரை நிறுத்தப்பட்டிருந்த கேஸ் மானியம், உர மானியம் உள்ளிட்டவற்றை மொத்தமாக மத்திய அரசு பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என சொல்லப்படுகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிகளை ஒட்டுமொத்தமாக பயனாளிகளை வங்கிக் கணக்கில் செலுத்தவும், அதாவது கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை ஒன்று சேர்த்து மொத்தமாக 12 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு தமிழக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications