Election Exclusive: பாஜகவுக்கு திடீர் பாசம்..ஓபிஎஸ்ஸை கூட்டிட்டு வாங்க! நைட் மீட்டிங்கில் ஆர்டர் போட்ட அமித்ஷா? ட்விஸ்ட்
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்த விவாதங்கள் வேகமெடுத்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக மீண்டும் அரசிலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவே நேரடியாகத் தலையிட்டதாக அதிமுக வட்டாரங்களில் முனுமுனுக்கப்படுகிறது.
தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓபிஎஸை விரைந்து கூட்டணியில் இணைத்து, தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலை கட்சி நிர்வாகிகளுக்கு அமித் ஷா வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தனித்த அரசியல் பாதையில் செயல்பட்டு வந்த ஓபிஎஸ்-ன் அடுத்த முடிவு என்ன என்பதே நீண்ட நாட்களாக கேள்வியாக இருந்து வந்தது.

ஓபிஎஸ் கூட்டணி
தற்போது அவர் மீண்டும் எண்டிஏ கூட்டணிக்குள் வரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாஜக அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பின் ஒப்புதலுடன் ஓபிஎஸை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன்
இதற்கு முன்பு நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பத்தில் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த சில தரப்புகள் கூட இறுதியில் கூட்டணியில் இணைந்தது, எண்டிஏ கூட்டணியால் தமிழக அரசியல் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமித்ஷா ஆலோசனை
இந்த அரசியல் மாற்றங்களுக்கு மையமாக சமீபத்திய அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் பார்க்கப்படுகிறது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் திட்டம், கூட்டணி விரிவாக்கம் மற்றும் பூத் கமிட்டியை வலுப்படுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கூட்டத்தில் மாநில மற்றும் மத்திய அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
என்.டி.ஏ விரிவாக்கம்
அந்த ஆலோசனையின் போது, கூட்டணியை வலுப்படுத்துவது அவசியம் என்றும், ஓபிஎஸை உடனடியாக கூட்டணியில் இணைக்கும் பணியை முன்னுரிமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பிற கட்சிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை விரைந்து முடித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக கூட்டணி பேச்சு
இவ்வளவு நாள் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டும் காணாமல் இருந்த பாஜக தற்போது திடீரென ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஓ பன்னீர்செல்வம் தனித்து செயல்படும் போது அவருக்கு பெரிய அளவிலான ஆதரவு வாக்கு வங்கியோ இல்லை. அதே நேரத்தில் சசிகலா, விஜய் உள்ளிட்டோருடன் சேர்ந்தால் ஓ பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி கிடைக்கும். குறிப்பாக சசிகலாவும் ஓ பன்னீர்செல்வம் சேர்ந்தால் முக்குலத்தோர் வாக்கு வங்கி பெரிய அளவில் அவர்களுக்கு சென்று விடும்.
பிரேமலதா விஜயகாந்த்
இதனால் அதிமுகவும் பாஜகவும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அதன் காரணமாகத்தான் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களெ இருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக முக்கியத்துவம் அளித்துள்ளது என்கின்றனர். மேலும் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவரையும் கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும் எனவும் அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர் நம்மிடம் பேசிய பாஜகவினர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications