Election Exclusive: ஓபிஎஸ் Vs அண்ணாமலை.. பழைய பழக்க வழக்கம்! பழனி பக்கம் ஒதுங்கும் பன்னீர்செல்வம்! உள்குத்து பாலிடிக்ஸ்!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தற்போது திமுகவில் இணைந்திருப்பவருமான ஓ.பன்னீர்செல்வம் 2026 சட்டமன்ற தேர்தலில் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். தேனியை விட்டு இந்த முறை முதன்முறையாக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, அமமுக மற்றும் திமுக உள்குத்து பாலிடிக்ஸால் தனது வெற்றி பாதிக்கப்படும் என அச்சப்படும் பன்னீர்செல்வம் பழைய பாசத்தில் பழனி தொகுதியை தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான் இருக்கிறது.
அப்படி இரு சம்பவங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஒன்று தேமுதிக திமுகவுடன் இணைந்தது. சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்கிய விஜயகாந்த் தனித்தும், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

திமுக அதிமுக
பலமுறை முயன்ற போதும் திமுகவுடன் கூட்டணி சேரவே இல்லை. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதே நேரத்தில் பாஜக அதிமுகவும் தேமுதிக கூட்டணிக்கு வரவழைக்க தீவிரமாக முயன்று வந்தது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு என்ற ஆஃபரை கொடுத்து தேமுதிக கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டது .இதையெல்லாம் விட பெரிய அதிர்ச்சி ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது தான்.
ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும், ஒருமுறை துணை முதலமைச்சர் ஆகவும், அதிமுகவின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என பல முக்கிய பதவிகளை வகித்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட மோதலால் விலகியே இருந்தார். அதிமுகவில் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் தனி கட்சி தொடங்கி விஜய் உடன் கூட்டணி சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஓபிஎஸ்
ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி திமுகவிலேயே இணைந்து இருக்கிறார் ஓபிஎஸ். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் முதலமைச்சராக இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது இதுவே முதல்முறை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில் வரும் தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி அவர் வெற்றி பெற்றால் சபாநாயகர் அல்லது அமைச்சர் பதவி வழங்க திமுக திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
ஓபிஎஸ் மோதல்
அவர் தனது சொந்த ஊரான பெரியகுளம் அல்லது போடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் படி ஓ பன்னீர்செல்வம் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. தேனி மாவட்டத்தில் ஏற்கனவே அதிமுகவினர் ஓபிஎஸ் மீது கோபத்தில் இருக்கின்றனர். அவருக்கு எதிராக டிடிவி தினகரனின் அமமுகவினரும் இருக்கிறார்கள். திமுகவில் சேர்ந்திருந்தாலும் முன்பு அதிமுகவிலிருந்து தற்போது திமுகவுக்கு வந்திருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிராக செயல்படலாம் என சொல்லப்படுகிறது.
பழனி சட்டமன்ற தொகுதி
இப்படி ஏற்கனவே இருந்த கட்சியிலும் தற்போது இருக்கும் கட்சியிலும் தனக்கு எதிராக உள்குத்து பாலிடிக்ஸ் தீவிரமாகும் என்பதால் தொகுதி மாற ஓபிஎஸ் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் பழைய பாசத்தில் பழனி தொகுதிக்கு அவர் தாவ இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்பு பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட்டபோது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கீழ் மலைப் பகுதிகள் பெரியகுளம் தொகுதியில் தான் இருந்தன. அங்கு கணிசமான வாக்குகளும் கிடைத்தது. மேலும் பழனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஒருவர் ஓபிஎஸ்-இன் பினாமி என்றும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் Vs அண்ணாமலை
எனவே பழைய பழக்கவழக்கத்தை வைத்து பழனியில் போட்டியிட ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார் என்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பழனி சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் வெர்சஸ் அண்ணாமலை என்ற போட்டி உருவாகி இருக்கும் நிலையில் பழனி சட்டமன்ற தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறும் வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications