விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்துள்ளது. 28 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் என்ற திமுகவின் ஆஃபரை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தலைமையிலான தவெக தேர்தல் அரசியலுக்கே வரவில்லை. 2026 விஜய் போட்டியிட்டு தனது வாக்கு பலத்தை முதலில் நிரூபிக்கட்டும் அதன் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம் எனக் கூறி ராகுலை சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில வாரங்களாக கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால் இந்த கூட்டணி உடையும் எனவே கருதப்பட்டது.
2016 தேர்தலில் போட்டியிட்டதைப் போல 41 தொகுதிகளையும், மேலும் ஆட்சியில் பங்கையும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், முக ஸ்டாலின் தலைமையிலான திமுக இந்த கோரிக்கையை நேரடியாக மறுத்ததாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல்
தமிழக அரசியலில் ஆட்சியில் பங்கு என்ற நடைமுறை பொருந்தாது. மேலும் மாநிலத்தில் காங்கிரசுக்கு வலுவான அமைப்பு இல்லாத நிலையில் அதிக தொகுதிகள் வழங்கினால் அது எதிரணிக்கு ஆதாயமாகி விடும் என்ற கருத்து திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி அடுத்த கட்ட அரசியல் விருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து சிந்தித்ததாக கூறப்படுகிறது.
காங்., தவெக கூட்டணி
தவெகவுடன் இணைந்தால் இளைஞர் வாக்குகளை ஈர்க்க முடியும், காங்கிரஸை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்ததாக தகவல்கள் பரவின. இதன் பின்னர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் கட்சியின் தரவு-பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சிக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டதும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.
ப.சிதம்பரம்
இந்த சூழ்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வழியாக திமுக தரப்பு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராகுல் காந்தியிடம் பேசிய கார்கே, தவெக தனது வாக்கு வங்கியை தேர்தலில் நிரூபிக்கட்டும். அடுத்து வரும் தேர்தல்களில் அவர்களுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம். 22 ஆண்டுகளாக தொடரும் திமுக கூட்டணியை தேர்தலுக்கு முன் முறிப்பது காங்கிரஸின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி பங்கீடு
மேலும் பார்லிமென்டில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்ள திமுக எம்.பி.க்களின் ஆதரவு காங்கிரஸுக்கு முக்கியம் என்றும் கார்கே எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட இழுபறியை சமாளிக்க ப.சிதம்பரம் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.
திமுக காங்கிரஸ்
திமுக வழங்கிய 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடத்தை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம்; எதிர்கால உள்ளாட்சி தேர்தல்களில் கூடுதல் வாய்ப்புகளை பெறலாம் என அவர் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக












Click it and Unblock the Notifications