Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: சின்னம்மாவுக்கு கோபம் வந்துருச்சு! ஜெ., பிறந்தநாளில் அம்மா அதிமுக! எடப்பாடிக்கு கேட் போட மெகா ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் வந்தாலே தமிழகத்தில் புதிய புதிய அரசியல் கட்சிகளும் சாதி அமைப்புகளும் உருவாவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒரு புதிய அரசியல் கட்சி உருவாகப் போகிறது. ஆனால், இது பத்தோடு பதினொன்று அல்ல.. தமிழக அரசியலை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆரம்பிக்கும் கட்சிதான் அது. 'அம்மா அதிமுக' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கும் அவர், ஓபிஎஸ், தனது தம்பி திவாகரன் உள்ளிட்டோரோடு சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோரின் வாக்கு வங்கியை உடைக்க புதிய திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் தினந்தோறும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதிமுகவின் உள்கட்சி அரசியல், பாஜகவின் கூட்டணி நிலை, அமமுகவில் திடீர் பிளவும், ஓபிஎஸ்-சசிகலா நிலைப்பாடு ஆகியவை சேர்ந்து சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளன.

இந்த சூழலில், தென் மாவட்ட வாக்குகளை குறிவைத்து ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவால் புதிய அரசியல் கணக்குகள் போடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் அதிகரிக்கும் என்கின்றனர்.

Tamil Nadu Assembly Election 2026 Sasikala AIADMK edappadi palaniswami

2026 சட்டமன்ற தேர்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வெளிவந்தார். பிறகு நேரடி அரசியலில் மீண்டும் ஈடுபட முயன்றாலும், பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் அரசியல் தடைகள் காரணமாக முழுமையாக களமிறங்க முடியவில்லை. அதிமுகவில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாக கூறப்பட்டாலும், அதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியில் சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சசிகலா புதிய கட்சி

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை மட்டும் சேர்த்துக் கொள்ள எடப்பாடி சம்மதித்ததையடுத்து, சசிகலா மற்றும் ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அரசியல் ரீதியாக தன்னை புறக்கணித்த எடப்பாடியையும், தன்னை எதிர்த்து செயல்பட்டதாக கருதப்படும் டிடிவி தினகரனையும் ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா புதிய வியூகம் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அம்மா அதிமுக தொடக்கம்

அதன் ஒரு பகுதியாக, தனிக்கட்சி தொடங்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அம்மா அதிமுக' என்ற பெயரில் புதிய கட்சி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய அரசியல் நகர்வு தென் தமிழகத்தை மையமாகக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.

எடப்பாடி சசிகலா மோதல்

இதற்கிடையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் பொதுச்செயலராக உள்ள அண்ணா திராவிடர் கழகம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் பரவியுள்ளது. திவாகரன் விஜய்யை சந்தித்து பேசியதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த கூட்டணி உருவானால், தென் மாவட்டங்களில் அதிமுக மற்றும் அமமுக வாக்குகளை பிரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சசிகலா தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சசிகலா நேரடி போட்டி

சுமார் 25 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கி, குறிப்பாக மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக பலமான போட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி போன்ற தொகுதிகள் கவனத்தில் உள்ளதாகவும், சில இடங்களில் சசிகலா நேரடியாகவே போட்டியிடலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிமுக வாக்கு பிளவு

அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் இந்த முயற்சிக்கு மறைமுக ஆதரவு தரக்கூடும் என்ற ஊகங்களும் கிளம்பியுள்ளன. அதிமுகவின் பழைய வாக்கு வங்கியை பிளந்து, எடப்பாடி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் வெற்றி வாய்ப்பை குறைப்பதே இந்த அரசியல் கணக்கின் மைய நோக்கம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இவை அனைத்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களாக இருந்தாலும், தென் தமிழகத்தில் உள்ள அதிமுக வாக்கு வங்கியை உடைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+