Election Exclusive: உஷாரய்யா உஷாரு! உடைய போகுது டிடிவி தினகரன் கட்சி..சவுத்தில் சத்தமில்லாமல் வேலை பார்க்கும் சின்னம்மா!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பரபரப்பாக வேலை செய்து வருகிறது. அதே நேரத்தில் ஒரு காலத்தில் அதிமுகவின் ராஜமாதாவாக இருந்த சசிகலா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டநிலையில், தற்போது மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் காலெடுத்து வைத்துள்ளார். தனது உறவினரான டிடிவி தினகரன் அதிமுக பக்கம் சென்றதால் கோபத்தில் இருக்கும் அவரது அமமுகவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவில் இருந்தும் பல நிர்வாகிகளை இழுக்க சசிகலா பேச்சை தொடங்கியுள்ளார் என்கின்றனர்.
தமிழக அரசியல் மீண்டும் ஒரு முறை அதிமுகவைச் சுற்றி, குறிப்பாக சசிகலா குடும்பத்தைச் சுற்றி சூடுபிடித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தொகுதி என வேகமாக நகர்ந்துசூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்தது சசிகலா வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அதுவரை எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரனின் இந்த மாற்றம் பல கேள்விகளை எழுப்பியது. ஓ.பன்னீர் செல்வமும் அதே அணியில் சேரத் தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா
இந்த சூழலில் சசிகலா அமைதியாக இருந்தாலும், அரசியலில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் என கூறப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறங்குவார்கள் என்று அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், தனிக்கட்சி தொடங்குவது குறித்து முடிவு எட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மா அதிமுக
பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அன்றே அம்மா அதிமுக என்ற புதிய கட்சி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என கூறப்படுகிறது. புதிய கட்சி தொடங்கிய பின், தவெக (தமிழக வெற்றி கழகம்) உடன் கூட்டணி அமைப்பது குறித்து சசிகலா தரப்பு யோசித்து வருவதாகவும், இதுதொடர்பாக சசிகலாவின் தம்பி திவாகரன் நடிகர் விஜயை சந்தித்து பேசியதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல்வேறு கணிப்புகளை கிளப்பியுள்ளது.
டிடிவி தினகரன்
இதற்கிடையில், தினகரன் தன்னை அரசியல் ரீதியாக புறக்கணித்துவிட்டார் என்ற உணர்வு சசிகலாவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அமமுக அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா தரப்பு தொடர்பில் இருப்பதாகவும், பலர் புதிய அமைப்பில் சேர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் இருந்த சில முன்னாள் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அமமுகவுக்கு சிக்கல்
புதிய கட்சி தொடங்கிய பிறகு அமமுக உடைந்து போகும், அதிமுகவிலும் சில அதிருப்தியாளர்கள் சசிகலா பக்கம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாக தெரிகிறது. இதனால் அமமுக மட்டுமின்றி அதிமுகவிலும் பதற்றம் உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் இந்த முன்னேற்றங்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மதுரை மண்டலத்தை மையமாகக் கொண்டு அரசியல் திட்டம் தீட்டியுள்ள சசிகலா, திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக ஜீவிதா நாச்சியாரை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தேர்தல்
உசிலம்பட்டியில் தற்போதைய எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஐயப்பனை எதிர்த்து தானே களமிறங்குவது அல்லது அவரை ஆதரித்து வேலை செய்வது என்ற ஆப்ஷன்களும் ஆய்வில் உள்ளன என கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமூக வாக்குகள் தன்னுக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பும் சசிகலா தரப்பில் இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவதே சசிகலாவின் முதல் விருப்பமாக இருக்கிறது என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
தென் மாவட்ட அரசியல்
மொத்தத்தில், தினகரன் எடுத்த கூட்டணி முடிவு, திவாகரன்-விஜய் சந்திப்பு, சசிகலாவின் புதிய கட்சி திட்டம் ஆகியவை இணைந்து அதிமுகவை மீண்டும் ஒருமுறை பரபரப்பாக்கியுள்ளன. வரும் நாட்களில் அறிவிக்கப்படும் டிவுகள் தமிழக தேர்தல் அரசியலில் புதிய சலனங்களை உருவாக்கும் என்கின்றனர் தென் மாவட்ட அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளார்கள். இதனை தெரிந்து கொண்ட டிடிவி தினகரன் தரப்பும், எடப்பாடி தரப்பும் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளதாம்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications