Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: சைலண்டாய் ஸ்டாலின் சம்பவம்.. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கூட்டணி! திரைமறைவில் நடப்பதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சலசலப்புகளை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழு அமைக்காமல், ரகசிய முறையில் பேச்சுவார்த்தை நடைபெறுவது மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைக்கும் நிலைப்பாட்டை திமுக தரப்பில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணிகளை வலுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள நிலையில், எந்த அணியில் சேர வேண்டும் என்ற குழப்பத்தில் தேமுதிக இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

காங்கிரஸ் திமுகவை விட்டுச் சென்றால் அதிக தொகுதிகள் கேட்கலாம், அதிமுக கூட்டணிக்குச் சென்றால் ராஜ்யசபா சீட் உடன் பாஜகவிடம் மத்திய இணையமைச்சர் பதவி கேட்கலாம் என்ற திட்டமே தேமுதிகவுக்கு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 mk stalin

திமுக கூட்டணி பேச்சு

இந்நிலையில், திமுக கூட்டணியில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே, கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச தனி குழு அமைப்பது அரசியல் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது கூட்டணி வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுகவே போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் தேர்தல் திட்டம்

இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்க முடியாது என்ற தகவலும் பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அதன் விவரங்கள் வெளியில் வெளியாகி தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும் அபாயம் இருப்பதாகக் கருதி, முதலில் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மூத்த அமைச்சர்கள் வாயிலாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் திமுக உறவு

கூட்டணி இறுதி நிலையை எட்டாததால், காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தையும் இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சில சிறிய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆரம்ப கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேல்முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ரகசிய பேச்சுவார்த்தை

குறிப்பிட்ட தொகுதிகள் குறித்து மாற்றங்கள் கோரப்பட்டுள்ளன என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையும் இழுபறியாகவே உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவாக வழங்கப்படும் என கூறப்பட்டதால் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி குறைவாக இருந்தது என்ற காரணத்தைக் கொண்டு இடங்கள் குறைக்கப்படுவதாக அமைச்சர்கள் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள்

அதேபோல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உடனான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. திமுக சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும், இல்லையெனில் குறைவான இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மதிமுக தரப்பில் ஒப்புதல் கிடைக்காததால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு குறைவான இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணி அதிருப்தி

இதனால் அக்கட்சியிலும் அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சூழ்நிலையில், கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சமாளிக்க நேரடி ஆலோசனைகள் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியாக பேசி கருத்து வேறுபாடுகளை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக முடிவடைந்த பின்னரே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+