Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: ஆனந்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சண்டை.. பனையூரில் காரசார வாதம்! கண்டுக்காத விஜய்! தவிப்பில் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் தேர்வு பணிகளை வேகப்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு வெளிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் வியூக நிர்வாகி ஜான் ஆரோக்கியசாமி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பிரதான கட்சிகள் நான்கு முனைகளில் நின்று 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கின்றன. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் பெரும் கூட்டணி ஒன்று தேர்தல் களத்துக்கு தயாராக இருக்கிறது.

அதனுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநில கட்சிகளான மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் துணை நிற்கின்றன. திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்த கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது என்றே சொல்லலாம்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Vijay tvk

2026 சட்டசபை தேர்தல்

மறுபுறம் தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுகவில் தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சிகளான பாமக, ஐஜேகே, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என உறுதியாக சொல்லி இருக்கிறார். இதில் நான்காவதாக எண்ட்ரி கொடுத்தவர் தான் விஜய். தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலில் குதித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு என கூறி விஜய் பல தேர்தல்களைக் கண்டு கொள்ளவில்லை. இதுவே விஜய் மீதான விமர்சனமாகவும் முன் வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம்

வீட்டுக்கு ஒரு ஓட்டு என இரண்டரை கோடி வாக்குகளை குறி வைத்து தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்கின்றனர் அந்த கட்சியினர். ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கைகளும் அந்த கட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் தொண்டர்கள் கடும் சோர்வடைந்துள்ளனர். இந்த சூழலில், 2026 தேர்தலை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தவெக வேட்பாளர் தேர்வு

கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். மேலும், அக்கட்சியில் இருக்கும் 2ஆம், 3ஆம் கட்ட நிர்வாகிகளை யாருக்கும் தெரியாது என்பதால், வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே இறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற தவெக ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்காக நீண்டகாலமாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆனந்த் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

பனையூர் ஆலோசனை கூட்டம்

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றியவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு வழங்குவது கட்சித் விஜய்யின் விருப்பம் என்றும் அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த பட்டியலில் உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவித்தால் தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என ஜான் ஆரோக்கியசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வெற்றி பெறக்கூடிய திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்வதே முக்கியம் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக உட்கட்சி மோதல்

வாக்குவாதம் நீண்ட நிலையில், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் கருத்து வேறுபாடு தீராத நிலையில், இந்த விவகாரத்தில் முடிவு வரும் வரை கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டேன் என ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

விஜய் அமைதி

கட்சிக்குள் நிலவும் இந்த திடீர் மோதல், 2ஆம் கட்ட நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய முடிவுகளில் விஜய் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், வேட்பாளர் தேர்வு தொடர்பான இந்த மோதல் பனையூர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+