Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: கூடவே இருந்த குமாரான மதிமுக..நேற்று வந்த தேமுதிகவுக்கு இவ்வளவா? சண்டை செய்ய தயாரான வைகோ! 12 டார்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவும் அதிமுகவும் கிட்டத்தட்ட தங்கள் கூட்டணியை இறுதி செய்து விட்டன. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இன்று எந்த பக்கம் செல்வது என தெரியாமல் திணறி வருகிறது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் என்ன செய்வது என குழப்பத்தில் உள்ளதாம் மதிமுக. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு 12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்ய சபா சீட் வேண்டும் என வைகோ கேட்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணிக் கணக்குகளை கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டன என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒருகாலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக தற்போது எந்த அணியில் சேர வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. பிரேமலதா விஜயகாந்தின் முடிவு திமுக கூட்டணியின் உள்ளக சமநிலையையே மாற்றக்கூடியதாக இருக்கும் என்பதால், அதற்கான அரசியல் கணக்கீடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tamil Nadu Assembly Election 2026 Vaiko DMDK DMK

2026 சட்டமன்ற தேர்தல்

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட நான்கு முக்கிய அணிகளுக்கிடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உள்ளது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகள் வேகமெடுத்து வருகின்றன. திமுக ஏற்கனவே கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த முறையும் பெரிய கூட்டணிப் பலத்துடன் தேர்தலை சந்திக்கத் திமுக முயற்சி செய்து வருகிறது.

திமுக கூட்டணி

தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு வெளியிலும் சில சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இதுவரை திமுக அணியில் சேராத தேமுதிக இணையும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவே கூட்டணிக்குள் புதிய கணக்குகளை உருவாக்கியுள்ளது.

தேமுதிக வருகை

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கியது. அந்த தேர்தலில் 133 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதே மாதிரியான வெற்றிக் கணக்கை 2026-இலும் தொடர விரும்புகிறது. ஆனால் இம்முறை கூட்டணியில் இடம் பெற விரும்பும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை 174-இல் இருந்து 170 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இட ஒதுக்கீடு

அதன்படி காங்கிரஸுக்கு 25, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 6, மக்கள் நீதி மய்யம் 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, மனிதநேய மக்கள் கட்சி 2 ஆகியவை போன்ற ஒரு முன்வைப்பு பேசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசி நேரத்தில் இணையும் கட்சிகளுக்காக சில தொகுதிகளை திமுக ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தேமுதிக திமுக அணியில் சேர்ந்தால், அதற்கான இட ஒதுக்கீடு கூட்டணிக்குள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மதிமுக தொகுதி பங்கீடு

குறிப்பாக மதிமுக தரப்பில் இருந்து கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற மதிமுக, இம்முறை தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. வைகோவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படாதது குறித்து கட்சியினருக்குள் அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ராஜ்யசபா இடம் தரப்படாத நிலையில், இந்த முறை குறைந்தபட்சம் 12 தொகுதிகள் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததாக கூறப்படுகிறது.

ராஜ்யசபா சீட் கோரிக்கை

ஒருவேளை தேமுதிக கூட்டணியில் சேர்ந்தால், அதனால் தங்களது தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் மதிமுக உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு கூட்டணிக்குள் முளைத்துள்ள சிக்கல்கள் 2026 தேர்தலுக்கு முன் மேலும் பல திருப்பங்களை திமுக கூட்டணியில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+