வண்டிய தென் மாவட்டம் பக்கம் திருப்பும் திருமாவளவன்.. விசிகவுக்கு திமுக 12 தருதா: TN Election Exclusive
சென்னை: தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, இந்த முறை வழக்கமான எண்ணிக்கையை தாண்டி கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.. எனினும் விசிகவின் எதிர்பார்ப்பை திமுக பூர்த்தி செய்யுமா? அப்படியே விசிகவுக்கு ஒதுக்கினாலும் மற்ற கூட்டணி கட்சிகள் அதனை ஏற்குமா? என்பது தெரியவில்லை.. விசிகவின் திட்டம்தான் என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கடந்த 2021 தேர்தலை விடவும், வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்க போவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

விசிக திருமாவளவன்
இப்போதுள்ள கிடைத்துள்ள தகவல்களின்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் குறைந்தது 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது... கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதை இரட்டிப்பாக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, கட்சி மாநில அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட சதவீத வாக்குகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தேவை என்ற சூழலில், இந்த 12 தொகுதிகள் இலக்கு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஒற்றை இலக்க எண்களில் தொகுதிகளை பெற்றால் அது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்..
தென் மாவட்டங்களில் விசிகவின் குறி
வழக்கமாக வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் விசிக, இந்த முறை தென் மாவட்டங்களிலும் தனது கால்தடத்தை பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இதற்காக, தென் மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளின் பட்டியலை விசிக தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2021 தேர்தலில் வட மாவட்டங்களிலேயே அதிக கவனம் செலுத்திய நிலையில், இந்த முறை மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் கணிசமான இடங்களை பெற பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம்.
சின்னம் மற்றும் தனித்துவப் போராட்டம்
தொகுதிப் பங்கீட்டில் இன்னொரு முக்கிய சிக்கலாக இருப்பது சின்னம்தான்.. ஏனென்றால் கடந்த முறையே சில வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள்.. அப்போதை சூழல் அப்படி அமைந்துவிட்ட நிலையில், இந்த முறையாவது தங்களின் தனித்துவத்தை நிலைநாட்டவும், கட்சியின் அங்கீகாரத்தை தக்கவைக்க விசிக நினைக்கிறதாம்..
அதனால்தான் அனைத்து தொகுதிகளிலும் தங்கள் சொந்த சின்னமான பானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் விசிக பிடிவாதமாக உள்ளது. ஒருவேளை திமுக அதிக தொகுதிகளை வழங்க முன்வந்தால் மட்டுமே உதயசூரியன் சின்னம் குறித்த பேச்சுக்கே இடமிருக்கும் என்ற நிலைப்பாடு நிலவுகிறது.
தற்போதைய அரசியல் சூழல்
எனினும், விசிகவின் இந்த 12 தொகுதிகள் கோரிக்கையானது திமுகவிற்கு ஒரு சவாலான விஷயமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் புதிதாக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள கட்சிகள் என அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.
இருந்தாலும், விசிக தனது களப்பணியை 144 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் மூலம் ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளது. இந்த முறை "எப்படியாவது கூடுதல் சீட் வாங்குவோம்" எனத் திருமாவளவன் பேசியிருப்பது, தொகுதி பேரம் இன்னும் தீவிரமடையும் என்பதையே காட்டுகிறது.
ஏற்கனவே செல்வப்பெருந்தகை வைக்கும் டிமாண்டை சமாளிக்க முடியாமல் திமுக மேலிடம் திணறி வரும்போது, திருமாவளவனின் கோரிக்கையை முழுமையாக நிறைவேறுமா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!











Click it and Unblock the Notifications