Election Exclusive: எள்ளுனு சொன்னா எண்ணெய்யாய் நிக்கனும்? உச்சகட்ட கோபத்தில் விஜய்! எட்டி பார்க்காமல் எஸ்கேப்பான தலைகள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டுள்ளது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராத நிலையில் பல்வேறு கட்சிகளில் இருக்கும் சீனியர்களையாவது அழைத்து வரவேண்டும் என அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் விஜய். ஆனாலும் பெயர் தெரியாத நபர்களே கட்சிக்கு வரும் நிலையில் விஜய் அதிருப்தி அடைந்துள்ளார் என்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது. மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரலில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. இதை அடுத்து தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை துவக்கி விட்டன.
ஆளும் திமுக ஒரு படி மேலே போய் தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறது. அந்த கட்சியின் கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன.

தமிழக அரசியல்
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இருக்கின்றன. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவே கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்திவிடும் என சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியின் அறிவித்த சீமான் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என சொன்னாலும் இதுவரை எந்த கட்சியும் அவருடன் சேரவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என விஜய் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் அவை எதிர் முகாம்களில் தஞ்சம் புகுந்து விட்டன.
கூட்டணி சிக்கல்
ஓபிஎஸ் திமுக பக்கம் காவலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இப்படி தான் ஆர்வத்தோடு காத்திருந்த எந்த கட்சியும் தனது கூட்டணிக்கு வராததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் விஜய். தமிழகம் அறிந்த அரசியல் முகங்களையாவது அழைத்து வாருங்கள் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் வந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம்
அதற்குப் பிறகு முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் வாரிசுகள் தான் கட்சிக்கு வந்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார் விஜய். சமீபத்தில் கூட தனபாலின் மகன் விஜய் கட்சியில் சேர்ந்திருந்தார். அதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படி கட்சிகளும் வரவில்லை சீனியர்களும் வரவில்லை என்பதால் நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் விஜய், குறைந்தது முன்னாள் எம்எல்ஏக்களையாவது அழைத்து வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம். ஆனால் அதுவும் கைகூடவில்லை.
விஜய் அதிருப்தி
மதுரையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான இசக்கிமுத்து, மன்னன், எஸ்ஆர் கோபி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. இதில் கார்த்திகேயன் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். மன்னன், எஸ்ஆர் கோபி ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில் குறுக்கே புகுந்த செல்லூர் ராஜூ அவர்களை அதிமுகவில் இணை வைத்தார். இதனால் மேலும் அதிருப்தி அடைந்துள்ள விஜய் நிர்வாகிகளுடன் பேச்சை குறைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications