Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என பரபரப்பு சூழல் நிலவி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது உருவாகி வரும் அரசியல் நிலைமையை பார்க்கும்போது, இது வழக்கமான இரு கட்சி போட்டியை தாண்டி, 'நான்கு முனை போட்டி' எனும் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத வகையில் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என பேசினார் விஜய். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்பட்டது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

இந்த நிலையில் விஜயின் அரசியல் முடிவுகளால் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்லுகின்றனர். தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

2026 சட்டமன்ற தேர்தல்

மறுபுறம், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் வலுவாக களம் இறங்கியுள்ளது. இதற்கிடையில், வழக்கம்போல் தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டைத் தொடர்ந்து கொண்டு வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருக்கிறது. இந்த நிலையில், தவெகவும் தனித்து களம் காணும் முடிவை எடுத்தால், அது நேரடியாக நான்கு முனை போட்டியை உறுதிசெய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த சில நாட்களாக, அமித் ஷா மூலம் பாஜக மேலிடம், விஜயை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

தவெக கூட்டணி

தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ள விஜயின் வாக்கு வங்கி முக்கியம் என பாஜக கருதியதாக கூறப்படுகிறது. இதற்காக, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வழியாகவும் தொடர்பு முயற்சிகள் நடந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் அரசியல் வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 90 தொகுதிகள் ஒதுக்கீடு, மேலும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டணி முறிவு காரணம்

இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததால், கூட்டணி பேச்சுவார்த்தை முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கட்சிக்குள் நிர்வாக மட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் வெளிச்சத்துக்கு வந்தன. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே அதிகார போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியானது. இந்த பின்னணியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், என்ன நடந்தாலும் நாம் தனித்தே போட்டியிடுவோம் என்று விஜய் தெளிவாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தனித்து போட்டி

மேலும், முரண்பாடுகளை சமாதானப்படுத்தி, தேர்தல் பணிகளை வேகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக தரப்பிலிருந்து கூட்டணிக்கான முயற்சிகள் இன்னும் முற்றிலும் கைவிடப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன. இதனால், இறுதி நேரம் வரை அரசியல் திருப்பங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், தவெக தனித்து போட்டியிடும் முடிவு உறுதியானால், அது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமையும்.

2026 சட்டமன்ற தேர்தல்

பல தொகுதிகளில் வாக்கு பங்கீட்டை மாற்றும் இந்த முடிவு, யாருக்கு சாதகமாக மாறும் என்பது தேர்தல் முடிவுகள் வந்தபின் தான் தெளிவாகும். ஆனால் ஒரு விஷயம் உறுதி - 2026 தேர்தல், இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டியுடன் நடைபெறப் போகிறது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருந்த விஜய் உடன் ஏன் யாருமே கூட்டணி அமைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அதிமுக, பாஜக, காங்கிரஸ், ராமதாஸ், சசிகலா உள்ளிட்டோர் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வந்தனர். ஆனால், விஜயை அணுகுவது அவ்வளவு எளிதானதாக இல்லை.

பனையூர் அரசியல் குழப்பம்

டிடிவி தினகரன் கூட விஜய்யை சந்திக்கவே முடியவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜயை சுற்றி ஒரு மர்மசுவர் எழுந்திருப்பதாகவும், அதனை தாண்டி விஜயை சந்திப்பது சாத்தியமில்லை என்பதால் கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே முடங்கி விட்டதாக சொல்கின்றனர். அது மட்டும் அல்லாமல் விஜயை சுற்றி இருக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இருதரப்பாக செயல்படுகின்றனர். ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் மற்றொருவர் அதனை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடாமல் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி விஜயை சுற்றி இருப்பவர்கள் விஜயின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+