Election Exclusive: உங்க விஜய் நான் வர்றேன்.. 2026 எந்த தொகுதியில் போட்டி? ’V' செண்டிமெண்டை விடாத விஜய்! கசிந்த தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விருப்பமுனு பெறப்பட்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் எங்கு போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் விஜயின் விருப்ப பட்டியலில் இருந்த நிலையில், வேதாரண்யத்தில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவு 2026 சட்டமன்றத் தேர்தல் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு சவால் அளிக்க கூடியதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக இந்த முறை அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

மற்றொருபுறம் பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலவருமான எடப்பாடி பழனிசாமி.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

தமிழக வெற்றிக் கழகம்

களத்தில் நானும் இருக்கிறேன் என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தானும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இதுவரையிலான தமிழக சட்டமன்ற தேர்தல்களில் 3 -4 முனை போட்டிகள் இருந்திருக்கிறது. அது பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கோ அல்லது ஆண்ட கட்சிக்கோ எதிராகத்தான் அமையும். அப்படித்தான் இந்த தேர்தலில் வாக்குகளை உடைக்க வருகை தருகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். கேரியரின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வருகிறேன் என கூறிவிட்டு மாநாடு பொதுக்கூட்டம் என பிரம்மாண்டம் காட்டி வரும் விஜய் 2026 தேர்தலில் போட்டியிடுவார் என கூறுகின்றனர்.

விஜய் அரசியல்

அந்த கட்சியினர் காங்கிரஸ் உடன் கூட்டணி ராமதாசுடன் கூட்டணி என பல்வேறு யூகங்கள் இறக்கை கட்டி பறந்தாலும், இதுவரை தமிழக வெற்றி கழகம் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் சில கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கிறது என தமிழக வெற்றிக் கழகம் சொல்லி வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வாங்கியும் ஆன்லைனில் டவுன்லோட் செய்தும் நிரப்பினர்.

'வி' சென்டிமென்ட்

ஆனால் அவற்றில் 10 சதவீதம் கூட டெபாசிட் உடன் தலைமைக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க செங்கோட்டையன் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர். கட்சியின் தலைவர் இந்த நிலையில் தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களை விஜய் எங்கு போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கம்போல் 'வி' சென்டிமென்ட் காரணமாக அந்த எழுத்தில் தொடங்கும் தொகுதிகளில் சொல்லப்படுகிறது. விருகம்பாக்கம், விழுப்புரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட தொகுதிகள் விஜயின் விருப்ப பட்டியலில் இருந்தன.

விஜய் வேதாரண்யம் தொகுதி

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் விஜய் போட்டியிடப் போவதாக சொல்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலில் கிறிஸ்தவ ஓட்டுகள் அதிகமாக இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என விஜய் ஆலோசித்து வந்தார். இதற்கிடையே கிறிஸ்தவர் ஓட்டுகள், மீனவர் ஓட்டுகள், இளைஞர்கள் பெண்கள் ஆதரவுடன் வேதாரணியத்தில் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என அவரது ஆதரவாளர்கள் ஐடியா கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

வேதாரண்யம் அரசியல்

'நின்றால் வெற்றி உறுதி' என சில கருத்துக்கணிப்புகளும் ஆய்வுகளும் சொன்னதால் நம்பகமான நபர் ஒருவரின் ஆலோசனைப்படி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தொகுதியில் விஜய் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. இந்த தொகுதியில் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ஓஎஸ் மணியன் எம்எல்ஏவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் திமுக வேட்பாளரை விட மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் அவர் வென்றார். இந்த நிலையில் அங்கிருக்கும் மீனவர்கள் விவசாயிகள், ஆதரவு தனக்கு இருக்கும் எனவும் விஜய் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற அடிப்படையில் வேதாரணியத்தில் விஜய் களமிறங்குவது உறுதி என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+