நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு
சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், நடிகரும் அரசியல் தலைவருமான Vijay திடீரென மும்பை சென்றது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் அவரது பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லி - ப்ரியா இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றதாக கூறுகின்றனர். ஆனால், உண்மையில் பொருளாதார விஷயமாக தான் விஜய் மும்பை சென்றுள்ளார் என்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வந்த விஜய், சமீப ஆண்டுகளில் அரசியலில் கால் பதித்து, தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்க தீவிரமாக முயன்று வருகிறார்.
குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு, கூட்டணி தொடர்பான ஆலோசனைகள், கட்சி அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது ஒவ்வொரு நகர்வும் அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

விஜய் மும்பை பயணம்
இந்த நிலையில், விஜய் தனியார் விமானம் மூலம் மும்பை சென்றது அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் அவரை வரவேற்க ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய் சிரித்தபடி ரசிகர்களுக்கு கைஅசைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, பின்னர் காரில் புறப்பட்டுச் சென்றார். விஜயின் இந்த மும்பை பயணத்திற்கான முக்கிய காரணம், பிரபல இயக்குநர் அட்லி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக என்பதே தற்போது தெரியவந்துள்ளது.
அட்லீ ப்ரியா வளைகாப்பு
இயக்குநர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீக்கு இன்று வளைகாப்பு நடக்கவிருக்கு நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே விஜய் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் மற்றும் அட்லீ இடையிலான நட்பு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி,மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றவை.
விஜய்-அட்லீ நட்பு
மேலும், இந்த திரைப்படங்களில் இடம்பெற்ற சமூக மற்றும் அரசியல் சார்ந்த வசனங்கள், விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் இருந்து விஜய்-அட்லீ நட்பு மேலும் வலுப்பெற்றதாக கூறப்படுகிறது. பல மேடைகளில் அட்லீ, விஜயை "அண்ணன்" என அழைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியதும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
நிதி உதவி
இந்நிலையில், அரசியல் ரீதியாகவும் விஜயின் கட்சி தற்போது தனித்தே பயணித்து வருகிறது. கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், மதச்சார்பற்ற கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என விஜய் முன்பே தெளிவுபடுத்தியிருந்தார். அதேநேரத்தில், கூட்டணி விவாதங்கள், விசாரணைகள், திரைப்பட சர்ச்சைகள் உள்ளிட்ட பல பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் விஜயின் இந்த மும்பை பயணம் நடந்துள்ளது.
அரசியல் வாரிசு
இந்த நிலையில் விஜயின் பயணம் தனிப்பட்ட நிகழ்வு என்பது பொதுவெளியில் பேசப்படுவதற்காக மட்டுமே. உண்மையில், விஜய் பொருளாதார ரீதியாக ஒருவரை சந்திக்க சென்றிருப்பதாக சொல்கின்றனர். இந்திய அளவில் மிக பிரபலமான ஒரு அரசியல் புள்ளியின் 'வாரிசு' விஜயுடன் பேசியதாக சொல்லப்படுகிறது. தேர்தலில் எதிரெதிர் அணியில் நின்றாலும் விஜய்க்கு பொருளாதரீதியாக உதவுவதாக அந்த அரசியல் புள்ளியின் வாரிசு உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அட்லி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அந்த அரசியல் வாரிசை விஜய் சந்திப்பார் எனவும், தேர்தல் காலத்தில் பொருளாதார ரீதியாக அந்த வாரிசு விஜய்க்கு உதவுவார் என்று சொல்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர்.












Click it and Unblock the Notifications