Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதால், அந்தக் கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து பிற கட்சிகள் உற்றுநோக்கி வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு முன் தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாகச் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களம் காணும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கான அடிப்படை பணிகள் கடந்த சில மாதங்களாகவே தொடங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர் தேர்வு பணியில் விஜய் நேரடியாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தல்
தற்போது பல்வேறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களுடன் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்வும் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்
அடுத்த வார இறுதிக்குள் முழுமையான வேட்பாளர் பட்டியலும் தயார் ஆகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை முழு வேகத்தில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைத் தாண்டியும், தவெக தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை விஜய் எடுத்துள்ளார்.
விஜய் மெகா திட்டம்
ஆரம்பத்தில் அங்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலை உருவாகாததால், புதுச்சேரியில் உள்ள அனைத்து 30 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் முடிவை கட்சி எடுத்துள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்நிலையில், தேர்தலுக்கு முன் தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாகச் சொல்கின்றனர்.
விஜய் போட்டோஷூட்
அதன்படி, மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிலை நிர்வாகிகள் வரை மொத்தம் சுமார் 2000 பேரை நேரில் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டோஷூட் மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை நகரில் உள்ள பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரச்சார பயணத் திட்டம்
இந்த இரண்டு தொகுதிகளும் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகள் என்பதால், முதல் கட்ட பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்குவது முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுமார் 25 நாட்கள் விரிவான பிரச்சார பயணத்திட்டத்தையும் விஜய் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, தேர்தல் பிரச்சாரத்தை முழுமையாக தொடங்க விஜய் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி!












Click it and Unblock the Notifications