Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் புதிய கட்சிகள் எண்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு குறித்து பேசப்படுகின்றது. குறிப்பாக பாஜகவின் அமித் ஷாவின் மேற்பார்வையில், ஆந்திராவின் பவன் கல்யாண் மூலம் பேச்சு நடத்தி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 40 சீட், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட ஆஃபர்களும் விஜய்க்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணியை ஆரம்பம் முதலே பலப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான அணியில் கூட்டணி குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் கூட்டணி கணக்குகள் பல்வேறு திசைகளில் நகர்ந்து வருகின்றன.
அதே நேரத்தில் எப்படியாவது திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மேலிடம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணி விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக-பாஜக
இதனால் முன்னாள் அதிமுக தலைவர்கள் சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்களையும் கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் அவை எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் தான் தள்ளிப் போனது. இந்த சூழலில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பிற தலைவர்கள் மூலம் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில் பாஜக தரப்பில் 55 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாம் 25 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அமித் ஷா
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அமித் ஷா நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அதிலும் எந்தத் தீர்வும் கிடைக்காததால் தற்போது "ஆபரேசன் விஜய்" என்ற அரசியல் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பவன் கல்யாண் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தொடர்புகள் மூலம் விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் பாஜக கூட்டணி
அதில், "திமுக அரசை அகற்ற வேண்டும் என்பது பொதுவான இலக்கு. நீங்கள் என்.டி.ஏ. கூட்டணியில் சேர்ந்தால் 50 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க தயாராக இருக்கிறோம்" என பாஜக தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல்கள் வெளியாகியதும் அதிமுக தரப்பில் அதிருப்தி உருவாகியதாக கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு 40 தொகுதிகள், பாஜகக்கு 50 தொகுதிகள் என்றால் அதிமுக எங்கே நிற்கும்? என்று அதிருப்தி தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக தலைவர்கள்
இதே நேரத்தில், விஜய்யை குறித்த எதிர்மறை கருத்துகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று பாஜக தலைமை தனது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எண்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்தால் வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும் தவெக தரப்பில் இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய பிறகு அவர்களுடன் கூட்டணி அமைப்பது எப்படி சாத்தியம்? இது திமுக தரப்பின் அரசியல் லாப என்ற கருத்தும் அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது.
2026 சட்டசபை தேர்தல்
இந்த சூழலில் 2026 தேர்தலை முன்னிட்டு விஜய் எந்த அரசியல் முடிவை எடுப்பார் என்பது தமிழக அரசியலில் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. கூட்டணியில் சேர்வாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
-
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம்












Click it and Unblock the Notifications