தேர்தல் திருவிழா.. டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதனையொட்டி, தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.
திருவிழாக் காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை போல, ஆட்டம், பாட்டத்திற்காக தேர்தல் திருவிழாவின் போதும், மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்தல் நடக்கும் நாளுக்கு, 2 நாட்கள் முன்பாகவே, டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளில் கடைகள் மூடப்பட உள்ளன.

பார்களை மூட உத்தரவு
தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, மிக அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில், மதுபான விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நான்கு நாட்களுக்கு மூடல்
இந்த உத்தரவுக்கு ஏற்ற வகையில், தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களும், வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23ம் தேதியும் மூடப்படும் என்று கூறியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்
வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுபானக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

வேண்டுகோள்
இதே போல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ மற்றும் எடுத்துச் செல்லவும் கூடாது என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம் பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications