கனிமொழிக்காக களப்பணியாற்றும் அனிதா ராதாகிருஷ்ணன்.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தேர்தல் பறக்கும் படை
Recommended Video

சென்னை: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான திமுக தலைவராகும். தற்போது கனிமொழி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதால் அவருடன், தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததாக கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு தண்டுபத்து பகுதியிலுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டுக்கு சோதனையிட சென்றனர்.
அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்பதால், திரும்பி சென்ற அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை மீண்டும் வருவதாக கூறியுள்ளனர். இதனால் தண்டுபத்து பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட உடன்குடி அருகேயுள்ள கிராமம்தான் தண்டுபத்து. தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், இந்த கிராமத்திலும் கூட பறக்கும்படை சோதனையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்
இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், எனது வீட்டில் வருமான வரி ரெய்டு, அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் பறக்கும்படை ரெய்டு. இப்படியெல்லாம் செய்தால், மக்கள் மனநிலை எப்படி மாறும் என்ற அடிப்படை அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications