கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல்
சென்னை: திமுக எம்பியும், புதுச்சேரி யூனியன் பிரதேச திமுக பொறுப்பாளருமான ஜெகத்ரட்சகன் நடத்தி வரும் நிறுவனத்தின் காரில் இருந்து ரூ.60 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் திமுக பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் உள்ளார். அரக்கோணம் எம்பியான இவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சென்னை வேப்பேரி காவல் நிலையம் அருகே இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜெகத்ரட்சகனின் நிறுவனத்துக்கு சொந்தமான கார் சென்றது.
அந்த காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ரூ.60 லட்சம் வரை பணம் இருந்துள்ளது. இதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ60 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். திமுக எம்பியாகவும், புதுச்சேரி திமுக பொறுப்பாளருமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின் நிறுவனத்தின் காரில் இருந்து ரூ.60 லட்சம் பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications