"எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லி தான் ஓட்டு வாங்க போகிறோம்!" கேப்பில் விஜய்க்கும் பதிலடி தந்த வேலுமணி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, இன்னும் ஒரே ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்பார் என்றார். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை வைத்துத் தான் நாம் ஓட்டு வாங்க போகிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியா..? ஸ்டாலினா..? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் போட்டி என்றும் தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை சார்பாக நடைபெறும் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணியும் பங்கேற்றார்.

எஸ்பி வேலுமணி பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய எஸ் பி வேலுமணி, "2026ல் தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்கப் போகிறார். அவரது பிறந்த நாளை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதிமுக நிறுவனரும் கழகத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த தலைவரான எம்ஜிஆர் பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறோம். அதன் பிறகும் கட்சியை வளர்த்து, நம்மை எல்லாம் வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதா. சாதாரணமாக விவசாயக் குடும்பத்தில் இருந்த நம்மை அமைச்சராக்கியது ஜெயலலிதா தான். அந்த வழியில் வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, முதலில் எம்எல்ஏ, வாரிய தலைவர், அமைச்சர் என படிப்படியாக முன்னேறியவர். தனது உழைப்பாலும் ஜெயலலிதா மீது இருந்த விஸ்வாசத்தாலும் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அதிமுக பொது செயலாளராக இருப்பவர் எடப்பாடி. 4 ஆண்டுகள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடியை வைத்தே ஓட்டு கேட்கப் போகிறோம்
அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்பதே நமது முக்கிய இலக்கு. எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர் கூட அதெல்லாம் வேண்டாம் என்றே சொன்னார். ஆனால், 2026 தேர்தலில் அவரை வைத்துத் தான், எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லியே வாக்குகளைப் பெறப் போகிறோம். எனவே, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டியது நமது கடமை.
விஜய்க்கு பதிலடி
அடுத்த பிறந்த நாள் கொண்டாடும்போது சட்டசபைத் தேர்தல் முடிந்திருக்கும். அவர் முதல்வராகத் தேர்வாகி இருப்பார். ஓராண்டில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதல்வராகி இருப்பார். எனவே, நமது தலைவரை நாம் தான் கொண்டாட வேண்டும். அவரை வைத்துத் தான் வாக்குகளைப் பெறப் போகிறோம்.. எடப்பாடி பழனிசாமியா..? ஸ்டாலினா..? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் போட்டியாக இருக்கும். அப்போது தான் மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்" என்றார்.
முன்னதாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மட்டுமே 2026ல் போட்டி இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். ஆனால், 2026 தேர்தல் என்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் இடையே தான் எனச் சொல்லி விஜய்க்கு வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார்.
பாராட்டு
தொடர்ந்து பேசிய எஸ் பி வேலுமணி, "எம்ஜிஆர் காலத்தில் கிளைச் செயலாளராக இருந்தவர். 1989ம் ஆண்டிலேயே சேவல் சின்னத்தில் வென்றவர் எடப்பாடி. கடுமையான உழைப்பாளி. முதல்வரான பிறகும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 7.5% இட ஒதுக்கீடு தொடங்கிப் பல சாதனைகளைச் செய்தார்.
அவர் முதல்வரான போது 2, 3 மாதங்களில் ஆட்சி போய்விடும் என்றனர். ஆனால், 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியவர் முதல்வர். கோவையில் 10 சட்டசபைத் தொகுதிகளில் 10 தொகுதிகளிலும் வென்றோம். அதற்குக் காரணம் அதிமுக கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்கள். எல்லா மாவட்டங்களிலும் வளர்ச்சியைக் கொண்டு வந்தோம்" என்றார்.
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications