அரசியல் களத்தில் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார்?.. விஜய் வாகை சூடுவாரா?.. ஜோதிடம் காட்டும் சிக்னல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதியான இன்று தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் தீவிரமாக பணியாற்றியுள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இருப்பினும், தேர்தல் கள நிலவரம் என்ன மாற்றத்தை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், உதயநிதி என யாருக்கு சாதகமாக இருக்கும் என்று பிரபல ஜோதிடர் ஷெல்வீ கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85.10% வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியாக அமைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைப் பிரித்து களத்தில் பலத்தை காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட ரீதியாக, சாதகமான தசா புத்தி தொடங்குவதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதக சில ஜோதிட ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், ஏழரைச் சனியின் தாக்கம் காரணமாக பெரும் போராட்டத்திற்குப் பிறகே வெற்றிக் கனியை எட்ட முடியும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், விஜய்க்கு நீசபங்க ராஜயோகம் உள்ளதால் அவர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும், வாகை சூடுவார் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், இந்த தேர்தல் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், உதயநிதி என யாருக்கு சாதகமாக இருக்கும் என்று பிரபல ஜோதிடர் ஷெல்வீ கணித்துள்ளார்.
விஜய் ஜாதகம் சாதகம்
விஜய் கடக ராசியைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிசாமி கன்னி ராசிக்காரர். ஸ்டாலின் சிம்ம ராசிக்காரர். உதயநிதி ரிஷபம் ராசியைச் சேர்ந்தவர். நயினார் நாகேந்திரனுக்கான அமைப்புகளும் நன்றாக இருக்கிறது. தனிப்பட்ட ஜாதகத்தில் விஜய்யின் ஜாதகம் தான் மிகுந்த வலிமையோடு உள்ளது. உதயநிதிக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராகு புத்தி மாறி குரு புத்தி நடக்கிறது. இது அவருக்கு வலிமையை கொடுக்கும். அது ஸ்டாலினுக்கும் பெரிய பலம். வருகிற குருபெயர்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு குரு பலத்தை கொடுப்பார். அது மே மாதத்திற்கு பிறகு தான். 10 ஆம் இடத்தில் உள்ள குரு பதவியை கெடுக்க பார்ப்பார்.
உதய்க்கு ராசி
நயினார் நாகேந்திரன் ஜாதகம் நின்று நிதானமாக முடிவு செய்து செயல்படக்கூடியவர். அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தாலும், திமுக கூட்டணிக்கு அசுர பலத்துடன் இருக்கிறது. பாஜகவின் அமைப்புகள் இந்தமுறை அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.
விஜய் பிரிக்க போகும் வாக்குகள் தான் இந்த தேர்தலில் பெரிய ட்விஸ்டாக இருக்கும். இந்த தேர்தலில் சீமான் பழையபடி வாக்கு வாங்குவது சந்தேகம் தான். புரட்டாசியில் இருந்து விஜய்க்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. நீட்சபங்க ராஜயோகம் இருக்கும் ஜாதகத்தை குறைத்து எடை போட முடியாது. விஜய் - உதயநிதி இருவருக்கும் அந்த யோகம் உள்ளது. விஜய்க்கு ராகு புத்தியும் பலம். அதை அவர் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும் என்றார்.
-
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications