ஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க!

திமுக குத்தாட்டத்திலும் அஇஅதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும், கோர்ட் தீர்ப்பின்போதும் அதிமுக மகளிர் அணியினரின் கலகலப்பான குத்தாட்டத்தை சென்னை மக்கள் காணத் தவறியதில்லை. ஆனால் இந்த முறை அவர்களின் கால் சலங்கைகளை கட்டிப் போட்டு விட்டது திமுக!

இன்றும் கூட துள்ளிக் குதித்து கலக்கல் ஆட்டம் போடத் தயாராகத்தான் இருந்தனர் அதிமுக மகளிர் அணியினர். ஆனால் லோக்சபா தேர்தல் முடிவு அவர்களை ஆட விடாமல் அடக்கி விட்டது.

ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும் நாலைந்து பெண்கள் கூட வயது வித்தியாசமில்லாமல் வளைந்து வளைந்து ஆடி அசத்துவார்கள். கூடவே பெரிய மீசைக்காரர் ஒருவரும் கைகளை மேலே தூக்கி பாக்யராஜ் ஸ்டைலில் ஆட்டம் காட்டுவார்.

உற்சாகம்

உற்சாகம்

இன்று அது மிஸ்ஸிங். இன்றைய ஆட்டத்தை திமுக எடுத்துக் கொண்டு போய் விட்டது. அண்ணா அறிவாலயமே திமுகவினரின் உற்சாகக் கொண்டாட்டத்தால் ஜொலித்துக் காணப்படுகிறது. பெரும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.

இனிப்பு

இனிப்பு

அண்ணா, கருணாநிதி சிலையைச்சுற்றிலும் தொண்டர்கள் நிரம்பி வழிகின்றனர். சிலைகளுக்கு முன்பு கூடி இனிப்பு வழங்கி டான்ஸ் போடுகின்றனர். கருணாநிதிக்கு மாலை அணிவிக்கவும் தொண்டர்கள் தவறவில்லை.

அறிவாலயம்

அறிவாலயம்

வழக்கமான உற்சாகத்தை காண முடியாமல் அதிமுக தலைமைக் கழக அலுவலகம் வாடி வதங்கிப் போய்க்காணப்படுகிறது.கொஞ்சம் போலவே தொண்டர்கள் காணப்படுகின்றனர். வழக்கமான சந்தோஷத்தை அங்கு காண முடியவில்லை.

ஹைலைட்

ஹைலைட்

இன்று அறிவாலயத்தில் ஒரு பெண் தொண்டர் போட்ட குத்தாட்டம்தான் ஹைலைட்டாக இருந்தது. அதிமுக மகளிர் போடுவது போலவே அத்தனை முழுமையான குத்தாட்டத்தை அவர் காண்பித்தார். சும்மா சொல்லக் கூடாது. அதிமுக மகளிருக்கு நல்ல சவால் தரும் வகையில் அவரது ஆட்டம் இருந்தது.

அதிமுகவினர்

அதிமுகவினர்

அந்தப் பெண் முதலில் ஆட பின்னர் தொண்டர்கள் இணைய, கூடவே இன்னொரு பெண்ணும் சேர்ந்து கம்பெனி கொடுக்க அந்த இடமே மினி குத்தாட்டக் களமாக மாறியது. கொஞ்சம் கூட சளைக்காமல் ஆடிக் கலக்கி விட்டார் அப்பெண். இதையெல்லாம் பார்த்து அதிமுகவினர் எப்படியெல்லாம் மன வேதனைக்குள்ளானார்களோ தெரியவில்லை!

மொத்தத்தில் தேர்தலில் மட்டுமல்ல, குத்தாட்டத்திலும் கூட திமுகவிடம் தோற்றுப் போய் விட்டது அதிமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+