ம்ஹூம்... கிளீன் போல்ட்..தமிழகம், கேரளா முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக
Recommended Video
சென்னை/ திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல்களில் வட இந்தியாவில் சுனாமி போல தொகுதிகளை அள்ளி சுருட்டியது பாஜக. ஆனால் தென்கோடி முனையில் உள்ள தமிழகத்திலும் கேரளாவிலும் ஒரு இடத்திலும் கூட பாஜகவால் வெல்ல முடியாதது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 2014-ல் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகம், கேரளாவில் அந்த அலை எடுபடவில்லை.

அள்ளிய அதிமுக
அந்த தேர்தலில் அதிமுக அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றி தேசிய அளவில் 3-வது கட்சியாக உருவெடுத்தது. கேரளாவில் காங்கிரஸ் 6; இடதுசாரிகள் - 5; கேரளா காங்கிரஸ்-3 இடங்களில் வென்றன. இத்தனைக்கும் தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி என மெகா கூட்டணி அமைத்தது. கேரளாவில் ஈழவர் வாக்குகளை குறிவைத்து வெள்ளாபள்ளி நடேசன் மூலம் தனிக்கட்சி தொடங்கி களத்தை எதிர்கொண்டது பாஜக. ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தான்.

அதிமுகவுடன் கூட்டணி
தற்போதைய தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்தது. கேரளாவில் சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கால் பதிக்க துடித்தது பாஜக.

பாஜகவுக்கு இடம் இல்லை
ஆனால் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. வட இந்தியாவில் பல மாநிலங்களில் விஸ்வரூபத்தை காட்டிய பாஜகவுக்கு தென்கோடி முனையில் உள்ள இந்த இரு மாநிலங்களும் பூஜ்ஜியத்தையே கொடுத்திருக்கின்றன. தமிழகத்தில் திமுகவும் கேரளாவும் காங்கிரஸ் கூட்டணியும் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

பாஜக மீது வெறுப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் தமிழர் விரோத நடவடிக்கைகள் அத்தனை வெறுப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. கேரளாவில் இடதுசாரிகள்- காங்கிரஸ் இரண்டுமே வலிமையான வாக்கு வங்கியை வைத்துள்ளன. இரண்டுமே பாஜக எதிர்ப்பு அரசியலால்தான் நிலைத்து நிற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications