ஆமை வேகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணும் பணிகள்... முழுமையாக முடிவுகள் வர நள்ளிரவை தாண்டும்
சென்னை: ஐந்து மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை வாக்கு எண்ணிக்கை மெதுவாகவே நடைபெற்று வருகிறது.
இன்று தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது,
வாக்கு எண்ணிக்கை தொடங்கி 12 மணி நேரம் நிறைவடையுவுள்ள நிலையிலும், தற்போதுவரை 50% தொகுதிகளின் முடிவுகள் கூட அறிவிக்கப்படவில்லை.

காலதாமதம்
ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றபோது, தேர்தல் முடிவுகள் முழுமையாக வர சில நாட்கள் வரை ஆனது. இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலுமான தொகுதிகளில் முடிவுகள் அன்று மாலைக்குள்ளே தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தேர்தல் முடிவுகள் வர அதிக காலம் ஆகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதிக இயந்திரங்கள்
முக்கியமாக கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குப்பதிவு மையம் என்ற விகிதத்தில் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. தமிழகம், மேற்கு வங்கம் என அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அதிக இவிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. எனவே தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதம் ஆகியுள்ளது.

மாற்றம் இல்லை
இந்த முறை வாக்கு எண்ணும் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. இருப்பினும், கடந்த காலங்களில் ஒரு அறையில் 14 மேசைகள் போடப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை மேசைகளின் எண்ணிக்கை 7ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வாக்கு எண்ணிக்கை அதிக தாமதம் ஆகக் கூடாது என்பதற்காக வாக்கு எண்ணும் அறைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், கூட தேர்தல் முடிவுகள் வாரக் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவை தாண்டும்
பொதுவாகப் பிற்பகலில் எந்தக் கட்சி பெரும்பான்மையைப் பிடிக்கும் என்பது ஓரளவு தெளிவாகத் தெரிந்துவிடும். ஆனால் இந்த முறை யார் பெரும்பான்மையைப் பெறுவார்கள் என்பது உறுதியாகத் தெரியவே மாலை ஆகிவிட்டது. இதன் காரணமாகத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவுக்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications