விகடன் சர்வே.. ஆட்சியைப் பிடிக்கிறது திமுக.. விஜய் சர்ப்ரைஸ் வளர்ச்சி.. அதிமுகவுக்கு ஷாக்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். விகடன் பத்திரிகை வெளியிட்டுள்ள சர்வே முடிவில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் யார் அடுத்த முதல்வராக விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. விகடன் சர்வேயின் முழு முடிவுகள் இதோ.
விகடன் குழுமத்தின் ஜுனியர் விகடன் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மெகா சர்வே மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெறும் என்கிற கேள்விக்கு, திமுக கூட்டணிக்கு 36% மக்களும், அதிமுக கூட்டணிக்கு 33% மக்களும், தவெகவுக்கு 27 % மக்களும், நாம் தமிழர் கட்சிக்கு 3% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யாருக்கு எவ்வளவு சீட்
திமுக கூட்டணியில், திமுக 97 சீட்கள், காங்கிரஸ் 10, தேமுதிக 4, சிபிஎம் 4, விசிக 3, சிபிஐ 2, மதிமுக 1 என மொத்தம் 121 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுக 75 தொகுதிகள், பாமக 2, அமமுக , பாஜக தலா 2, புரட்சி பாரதம் 1 தொகுதி என மொத்தம் 83 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தவெக 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு, மற்றும் ஆர்கே நகர் தொகுதியியல் தவெக வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 தொகுதிகளில் இழுபறியில் உள்ளதாக சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த முதல்வர் விருப்பம்
நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு திமுக 37.50 %, அதிமுக 33.63 %, தவெக 24.71 %,, நாம் தமிழர் 2.71% ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டுமென விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு விஜய்க்கு 44%, ஸ்டாலினுக்கு 28%, எடப்பாடி பழனிசாமிக்கு 25%, சீமானுக்கு 3% மக்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்கிற கேள்விக்கு தனிக்கட்சி ஆட்சி என்று 55.9% மக்களும், கூட்டணி ஆட்சி என்று 32.1% மக்களும், தொங்கு சட்டமன்றம் என்று 12% மக்களும் கருத்து கூறியுள்ளனர். விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், இந்த தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்கிற கேள்விக்கு நாம் தமிழருக்கு 30.71%, அதிமுகவுக்கு 27.56 %, பிறர் என்கிற பிரிவில் 21.52% மக்களும், 20.21 % திமுகவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.
ஆட்சி மாற்றம் தேவையா
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா என்கிற கேள்விக்கு 62 % மக்கள் ஆம் என்றும், 38 % மக்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர். எதிர்கால தமிழக அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக இருப்பார்கள் என்கிற கேள்விக்கு, விஜய்க்கு 47.25% மக்களும், ஸ்டாலினுக்கு 24.9% மக்களும், எடப்பாடி பழனிசாமிக்கு 15.79% மக்களும், சீமானுக்கு 9.03% மக்களும், அண்ணாமலைக்கு 1.28% மக்களும் ஆதரவாக கூறியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications