கமல் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட்! தமிழகத்தில் எந்த கட்சிக்கு என்ன சின்னம்?
சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவைகளுக்கு நிலையான சின்னம் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், புதிய கட்சிகளுக்கு என்னென்ன சின்னம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் மே மாதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் வரும் பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கக் கூடும் என்றும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது தவெக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது தவெகவுக்கு அவர்கள் கேட்டது போலவே விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார்.
அப்போது ஊழல் கட்சிகள் மீதான கோபத்தை காட்ட டார்ச்லைட்டால் டிவியை உடைத்தார். அப்போது கமலின் முகத்தில் கடும்கோபம் இருந்தது. இதனால் கமல்ஹாசன் சினிமாவை போல் அரசியலிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன் உள்ளிட்டோர் விலகிவிட்டனர்.
இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகேவுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியை அடைந்தார். இதையடுத்து 2024 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்த அவர் அந்த தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என கூறி ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றார்.
இதற்கு கமல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு ராஜ்யசபா சீட்டு அவரது கலை உலக பயணத்திற்காக தானாகவே கிடைத்திருக்கும். ஆனால் அந்த பதவிக்காக கட்சியையே அடமானம் வைத்துவிட்டார், ஊழல் கட்சி ஊழல் கட்சி என சொல்லிவிட்டு தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி அமைத்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு கமலும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போதும் அவருக்கு டார்ச்லைட் சின்னம் கிடைத்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் ஓரிரு சீட்டுகள் ஒதுக்கப்படும். அந்த இடங்களில் போட்டியிட மநீமவில் முக்கிய, பிரபல நிர்வாகிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை. எனவே கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கினாலும் கமலின் தீவிரத்தன்மை அரசியலில் இல்லாததால் அது பேட்டரி இல்லாத டார்ச்சாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது யாருக்கு என்னென்ன சின்னம் என்பதை பார்க்கலாம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி- பானை சின்னம்
நாம் தமிழர் - விவசாயி சின்னம்
அமமுக- குக்கர் சின்னம்
தவெக - விசில் சின்னம்
மக்கள் நீதி மய்யம்- டார்ச் லைட்
இதில் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தலில் குறைந்தபட்சம் 5 சதவீத சட்டசபை தொகுதிகளில் தவெக, மநீம போட்டியிட வேண்டும்.
அது போல் தவெக போட்டியிடாத இடங்களில் அக்கட்சியின் விசில் சின்னம் சுயேச்சைகளுக்கு அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மற்றபடி தேமுதிகவுக்கு முரசு சின்னம் உள்ளது. பாமகவுக்கு மாம்பழச் சின்னம் இருந்தது. ஆனால் தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனினும் கட்சியும் சின்னமும் தன்னிடம் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். ஆனால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என ராமதாஸ் அணியும் தெரிவித்து வருகிறது.
இதனால் மாம்பழம் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி சேர ராமதாஸ் அணி விரும்புவதாக சொல்லப்படும் நிலையில் அவர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதிமுகவை பொருத்தமட்டில் பம்பரம் சின்னம் இல்லாமல் போனதால் கடந்த முறை தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார் வைகோவின் மகன் துரை வைகோ. இந்த முறை அக்கட்சிக்கு என்ன சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரியவில்லை.
அது போல் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் தலைவர் ஓபிஎஸ் கடந்த முறை ராமேஸ்வரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றார். இந்த முறை அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருடன் இருந்த மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் திமுக, தவெகவில் இணைந்துவிட்டனர். அது போல் குன்னம் ராமசந்திரன் அரசியலை விட்டு விலகிவிட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் நிர்வாகிகளில் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இதனால் அவரது நிலைப்பாடு தெரியவில்லை.
-
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி












Click it and Unblock the Notifications