தமிழகத்தில் 2 ராஜ்யசபா எம்.பி.இடங்களுக்கு அக்.4-ல் தேர்தல்.. திமுகவுக்கு டெல்லியில் பெருகும் பலம்.!
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் இந்த இரண்டு இடங்களையும் திமுகவே கைப்பற்றக்கூடும் எனத் தெரிகிறது.

அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தங்களது எம்.பி.பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட அந்த இரண்டு இடங்களிலும் சட்டமன்றத்தில் திமுகவுக்கு உள்ள பெரும்பான்மை அடிப்படையில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.
வைத்திலிங்கத்தின் ராஜ்யசபா எம்.பி.பதவிக்காலம் 2022 ஜூன் மாதம் நிறைவடைகிறது. இவரது இடத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர் அடுத்த ஓராண்டுக்கு மட்டுமே ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பார். இதேபோல் கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் வரை உள்ளது. இவரது இடத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெறுபவர் அடுத்த 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருப்பார்.
இந்த இரண்டு இடங்களுக்கும் திமுக சார்பில் யாரை நிறுத்தப்போகிறார்கள் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் கார்த்திகேய சிவசேனாபதிக்கு 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருக்கும் வகையில் ஸ்டாலின் வாய்ப்பு வழங்குவார் எனத் தெரிகிறது.
இதனிடையே தமிழகம் மட்டுமின்றி அசாம், மேற்கு வங்கம், மராட்டியம், உள்ளிட்ட மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தை நிரப்ப அக்டோபர் 4-ம் தேதி அன்று தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவை தொடர்ந்து அவரது இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டு அதற்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா நிறுத்தப்பட்டு போட்டியின்றி தேர்வானார்.
அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் 2 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 9-ஆக உயரவுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications