பரபரப்பு! அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் இ-பைக்குகள்! மாதவரத்தில் நடுரோட்டில் எரிந்த எலக்ட்ரிக் பைக்
சென்னை: மாதவரம் அருகே பேட்டரி மோட்டார் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேலூர் மாவட்டத்தில் இ-பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் உயிரிழந்தனர்.

புனே சம்பவம்
இ-பைக்கை சார்ஜ் போடும் போது இரவு நேரத்தில் பைக் பேட்டரி வெடித்துள்ளது. இதனால் வீட்டில் கடும் புகை ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த வாரம் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த போது, திடீரென பைக் தீ பிடித்தது.

ஒலா விளக்கம்
நல்வாய்ப்பாக பைக் தீ பிடித்து எரிந்த போது, அந்த பைக்கில் யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து சீரியஸான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

மாதவரத்தில் பரபரப்பு
இந்தச் சூழலில் மாதவரம் அருகே பேட்டரி மோட்டார் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் (21). கல்லூரி படித்து முடித்த இவர் திருவொற்றியூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் இ பைக்கில் வேலைக்குப் புறப்பட்டு மாதவரம் 200 அடிச் சாலை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் அருகே வரும்போது பைக் இன்ஜினில் இருந்து லேசாகப் புகை வந்தது.

முற்றிலும் தேசம்
உடனடியாக கணேஷ் வண்டியை நிறுத்திவிட்டு சற்று தூரம் சென்று நின்று விட்டார். இதனைத் தொடர்ந்து மோட்டார் பைக் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த வழியாகச் சென்ற குடிநீர் லாரியை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், அதற்குள்ள இ பைக் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications