224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்
சென்னை: "நான் 224 யூனிட்டுகள் பயன்படுத்தியுள்ளேன். 200 யூனிட் இலவச திட்டத்தின் கீழ், அதிகாரப்பூர்வ TNEB கால்குலேட்டர் செலுத்த வேண்டிய தொகை ₹112 என்று காட்டுகிறது, ஆனால் எனக்கு வந்த SMS-இல் ₹302 என்று உள்ளது. இந்த முரண்பாட்டை விளக்கி, பில் தொகையை சரிபார்த்துத் தரவும்." என்று மின்வாரியத்தை ஒருவர் டேக் செய்திருந்தார். அதற்கு மின்வாரியம் அளித்த விளக்கத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின்சார மானியத் திட்டத்தின்படி, இருமாத நுகர்வு 500 யூனிட்டுகளுக்குக் கீழ் உள்ள வீடுகளுக்கு முதல் 200 யூனிட்டுகள் முற்றிலும் இலவசம்.

மொத்த யூனிட்டுகள்: 224
இலவச யூனிட்டுகள்: -200
கட்டணத்திற்குரிய யூனிட்டுகள்: 24 யூனிட்டுகள் மட்டுமே.
கணக்கீடு: இந்த 24 யூனிட்டுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ₹4.70 வீதம் கணக்கிட்டால் = ₹112.80
எனவே, இந்த புதிய 200 யூனிட் இலவச திட்டத்தின்படி உங்கள் தற்போதைய கட்டணம் ₹112.80 (தோராயமாக ₹113) ஆகும். அப்படியென்றால் SMS-இல் வந்த தொகை (₹302) ஏன் மாறுபடுகிறது?
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்:பழைய கட்டண முறைப்படி SMS வந்திருக்கலாம்: புதிய 200 யூனிட் இலவச திட்டம் நடைமுறைக்கு மே 10ம் தேதி தான் வந்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதனை அப்படியே பார்ப்போம்.
புதிய 200 யூனிட் இலவச திட்டம் 2026 மே 10 முதல் தான் அமலுக்கு வந்துள்ளது. உங்கள் மின்சார அளவு கணக்கெடுக்கப்பட்ட நாள் (Assessment Date) 21.05.2026. அதாவது, புதிய திட்டம் தொடங்கி 12 நாட்கள் மட்டுமே ஆகியிருந்த போது உங்கள் பில் எடுக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த 60 நாட்களுக்கான (இருமாத) பில் சுழற்சியில், புதிய திட்டம் அமலில் இருந்த அந்த 12 நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் (Proportionate Basis) கணக்கிட்டு இந்த பில் தொகையை மின்சார வாரியம் நிர்ணயித்துள்ளது.
புதிய திட்டம் தொடங்கிய நாள்: 10.05.2026
உங்கள் பில் எடுக்கப்பட்ட நாள்: 21.05.2026
புதிய திட்டத்தின் கீழ் வரும் நாட்களின் எண்ணிக்கை: 12 நாட்கள் (10.05.2026 முதல் 21.05.2026 வரை)
இலவச யூனிட் கணக்கீடு:வழக்கம்போல உங்களுக்குக் கிடைக்கும் 100 யூனிட் முற்றிலும் இலவசம்.
புதிய திட்டத்தின்படி கூடுதலாக அறிவிக்கப்பட்ட 100 யூனிட் இலவசம் என்பது 60 நாட்களுக்கு உரியது.
ஒரு நாளுக்கான கூடுதல் இலவச யூனிட்: 100 யூனிட் ÷ 60 நாட்கள் = 1.66 யூனிட்டுகள்/நாள்.
உங்களுக்கான 12 நாட்களுக்குரிய கூடுதல் இலவச யூனிட்டுகள்: 19.9 யூனிட்டுகள்.
மொத்த இலவச யூனிட்டுகள்: 100 (வழக்கமானது) + 19.9 (புதிய திட்டத்தின் 12 நாட்களுக்கு உரியது) = 119.9 யூனிட்டுகள்
உங்களது மொத்தப் பயன்பாடான 224 யூனிட்டுகளில், இலவச யூனிட்டுகள் போக மீதமுள்ள யூனிட்டுகளுக்குப் பின்வருமாறு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது:
பகுதி 1 (119.9 யூனிட் முதல் 200 யூனிட் வரை): இங்குள்ள 80.1 யூனிட்டுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ₹2.35 வீதம்
80.1 * 2.35 = 118.23 ரூபாய்
பகுதி 2 (201 யூனிட் முதல் 224 யூனிட் வரை): இங்குள்ள 24 யூனிட்டுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ₹4.70 வீதம்
24 * 4.70 = 112.80 ரூபாய்
மின்வாரியத்தின் விளக்கப்படி, புதிய திட்டம் மே 10-க்கு மேல் தான் அமலுக்கு வந்ததால், உங்களுக்கு முழுமையாக 200 யூனிட்களும் இலவசமாகக் கிடைக்கவில்லை. அடுத்த முறை (ஜூலை மாதத்தில்) உங்களுக்கு பில் எடுக்கப்படும் போது, முழுமையாக 60 நாட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், உங்களது பயன்பாடு 500 யூனிட்டுகளுக்குக் கீழ் இருந்தால் முழுமையாக 200 யூனிட்டுகளும் இலவசமாகப் பெற்று, பில் தொகை பெருமளவு குறையும்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications