மின்வாரியம்.. திடுதிப்புனு போட்ட உத்தரவு.. "உடனே கிளம்பி வாங்க".. தமிழக மின்சார வாரியம் அதிரடி.. செம
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டு உள்ளது.. என்ன காரணம்?
மின்சார வாரியத்தில் சமீபகாலமாகவே புகார்கள் கிளம்பி வருகின்றன.. மின்வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், லஞ்சத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை..
அதனால்தான், லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மின்வாரியம் சமீபத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது.. குறிப்பாக, சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் வார்னிங் தந்திருந்தது.

விஜிலென்ஸ்: அதுமட்டுமல்ல, ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். என்றும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் வேண்டும்" என்றும் சற்று காட்டமாகவே எச்சரித்திருந்தது.
அதேபோல, மின்வாரிய பொறியாளர்களுக்கு நேற்று முன்தினமும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதில், "மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்" என்று தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் புதிய உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இப்படி பொதுமக்களின் நன்மைக்காக, அடுத்தடுத்த அதிரடிகளை மின்துறை கையில் எடுத்து வரும்நிலையில், இப்போதும் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்றும் இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின் வாரியம் எச்சரித்துள்ளது.

டிரான்ஸ்பர்: அதாவது, தமிழக மின் வாரியத்தில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களில் சிலர், இன்னும் டியூட்டிக்கே வந்து சேரவில்லையாம்.. புதிய பணியிடத்தில் சேராமல், மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதாக தெரிகிறது. மேலும் சிலர், சிபாரிசுகளால் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே பணிபுரிந்த இடத்திற்கு ஆணையை பெற்று விடுகிறார்கள். இதனால், நியாயமாக இடமாற்றம் கிடைக்காமல், பலர் அவதிப்படுகிறார்களாம்.
அதனால்தான், இடமாற்றம் செய்யப்பட்ட நபரை, அவர் வகித்த பதவியில் இருந்து, உடனே விடுவிக்க வேண்டும், இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட நபர், ஒரு வாரத்திற்குள் புதிய பணியிடத்தில் சேராவிட்டால், அவர்களது புரமோஷன் ரத்து செய்யப்படுவதுடன், நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று வார்னிங் தந்துள்ளதாம்.
சபாஷ் நடவடிக்கை: மின்வாரியத்துறையின் இந்த அதிரடியால், விடுப்பில் உள்ளவர்கள் விரைந்து பணிக்கு திரும்புவார்கள் என்று நம்பப்படுகிறது. அத்துடன், தங்கு தடையின்றி இனி பணிகள் நடப்பதுடன், துரிதமாகவும் நடந்துமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications