Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மின் கட்டணம் மூலம் நூதன மோசடி.. ரூ.8 லட்சம் அபேஸ் செய்த கும்பல்.. உஷாரா இருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி நூதன முறையில் ஒருவரிடம் இருந்து 8 லட்சம் ரூபாயை மோசடி கும்பலினர் அபேஸ் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிலர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் கைகளில் பணம் புழக்கத்தில் இருந்ததால் திருடர்களும் ஏமாற்றி பணம் பறிப்பது, மிரட்டி பணம் பறிப்பது, அடித்து பணம் பறிப்பது போன்ற வழிகளிலேயே திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

 காலத்துக்கு ஏற்ப...

காலத்துக்கு ஏற்ப...

ஆனால் தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்களும் தங்களை மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் அப்போது இருந்து தற்போது வரை இந்த திருட்டு மட்டும் குறையவும் இல்லை. மாறவும் இல்லை. தொழில் நுட்ப காலத்துக்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடுவதில் தங்கள் நிபுணத்துவத்தை காட்டி வருகின்றனர்.

 நூதன முறையில் மோசடி

நூதன முறையில் மோசடி

பல்வேறு வகையில் ஹேக்கிங் செய்து வங்கி தகவல்களை திருடி பணத்தை நமக்கே தெரியாமல் நமது வங்கி கணக்கில் இருந்து லாவகமாக சுருட்டுவது என புது புது வழிகளில் மக்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி மெசேஜ் செய்து அதன் மூலம் பணத்தை திருடி ஒரு கும்பல் நூதன கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த புது வித மோசடி குறித்து சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் மூத்த அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

 மின் இணைப்பு துண்டிக்கப்படும்

மின் இணைப்பு துண்டிக்கப்படும்

அதன் விவரம் வருமாறு:-சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு திடீரென தனது செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை நீங்கள் கட்டியதாக எங்களுக்கு அப்டேட் ஆகவில்லை. உடனடியாக பணத்தை கட்டாவிட்டால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து இருக்கிறது. இதனால், பயந்து போன பாதிக்கப்பட்ட நபர், மெசேஜ் வந்த எண்ணை அழைத்து இருக்கிறார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்கள் கட்டணத்தை செலுத்த, தாங்கள் உதவுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்

ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்

இதற்கு பாதிக்கப்பட்ட நபரும் ஆமோதிக்க, செல்போனில் என்ன செய்தாலும் எதிர்முனையில் இருந்து பார்க்கும் வசதியை அளிக்கும் செயலிக்கான லிங்க் ஒன்றை அனுப்பி அதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்யுங்கள் என போனில் பேசியுள்ளார். மோசடி நபர் கூறியவற்றை அந்த நபர் அப்படியே பின்பற்றினார். மேலும் அவர் சொன்ன ஆப்பை இன்ஸ்டால் செய்து இருக்கிறார். பின்னர் இத்தகவலை கூறி உங்களுக்கு உதவியதற்காக எனக்கு 100 ரூபாய் மட்டும் செலுத்துங்கள் என்று மோசடி நபர் கூறியிருக்கிறார். இதனையும் அப்படியே நம்பி பாதிக்கப்பட்ட நபர் தனது யூபிஐ வங்கி கணக்கு மூலமாக 100 ரூபாய் செலுத்தியுள்ளார்.

 8 லட்சம் ரூபாய் திருட்டு

8 லட்சம் ரூபாய் திருட்டு

மொத்த செல்போனின் செயல்பாடும் மோசடி நபர் பார்வைக்கும் தெரிந்ததால், அவரின் வங்கி கணக்கு பாஸ்வேர்டு விவரங்களை மோசடி நபர் அலேக்காக திருடியுள்ளார். பின்னர் அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தையும் மோசடி கும்பலினர் திருடியிருக்கின்றனர். இதன் மூலம் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடியாளர்கள் திருடியுள்ளனர்.

எனவே வாடிக்கையாளர்கள் இதுபோன்ற போலி குறுஞ்செய்திகளை நம்பக்கூடாது என வலியுறுத்தியுள்ள சைபர் கிரைம் அதிகாரிகள், ஒருவேளை இப்படி மோசடியால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக மோசடி குறித்து புகார் அளித்தால், பரிவர்த்தனை மூலம் இழந்த பணத்தை மீட்டெடுக்கவும் முடியும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனார்.

 திரும்ப பெறுவது சிரமம்

திரும்ப பெறுவது சிரமம்

இதுபோன்ற நிதி மோசடிகளில், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு விரைவில் பணத்தை மீட்டெடுக்கத் தொடங்குகிறார்களோ, அந்த அளவுக்கு அது சிறந்தது. ஏனெனில், மோசடி நபர்கள் தங்கள் திருடிய பணத்தை எடுத்து விட்டால் அதை திரும்பப் பெறுவது கடினம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னை நபரை பொறுத்தவரை 20 நாட்களில் பணம் மீட்டு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் ஆனால், மோசடி நபர்களை இன்னும் கண்டறிய முடியவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து விரிவான தகவல் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+