அலறிய மின்வாரியம்.. அப்பதான் அமித்ஷா வந்தாரு.. உடனே கரண்ட் கட்.. ஞாபகமிருக்கா? இப்ப பாருங்க அதிரடியை
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால், தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. என்ன அது?
கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, சில சலசலப்புகள் எழுந்தன.. அன்றைய தினம் இரவு சென்னை ஏர்போர்ட்டுக்கு அமித்ஷா வந்தபோது, ஏர்போர்ட் வாசலிலேயே, அதாவது ஜிஎஸ்டி சாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது...
ஏர்போர்ட்: ஏர்போர்ட்டில் இருந்து அப்பதான் அமித்ஷா கிளம்பினார்.. உடனே கரண்ட் போய்விட்டது. ஏர்போர்ட் பகுதி முழுக்க இருளில் சிக்கிக்கொள்ளவும், அமித்ஷாவை பார்ப்பதற்காக, திரண்டிருந்த தொண்டர்கள் ஏமாற்றமாயினர்.. அமித்ஷா முகத்தை அவர்களால் பார்க்கவே முடியவில்லை.. பாஜக தொண்டர்கள் தவிப்பதை புரிந்துகொண்ட அமித்ஷா, டக்கென காரில் இருந்து இறங்கி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்தவர்களை சந்தித்து கையசைத்தார்.. வாழ்த்தும் கூறினார்.

எனினும் இந்த சம்பவத்தினால், பாஜக தொண்டர்கள் அப்செட்டானார்கள்.. மின்வெட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள், ஏர்போர்ட் வாயிலிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்.. அப்போது பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
இந்த விவகாரம் வெடித்து கிளம்பியதையடுத்து, மின்வாரியம் உடனடியாக ஒரு விளக்கத்தை தந்திருந்தது. அதில், "மின் பழுது காரணமாக திடீரென மின்வெட்டு ஏற்பட்டுவிட்டது, எனினும், அவை உடனே சரிசெய்யப்பட்டது என்று கூறியிருந்தது. ஆனாலும், உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது..
டிஜிபி சைலேந்திர பாபு: அத்துடன், இதற்கான விளக்கத்தை தர அறிக்கையாக தர வேண்டும் என்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு மத்திய உள்துறை சார்பாகவும் நோட்டீஸ் வந்து சேர்ந்தது. இதையடுத்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில், முக்கிய பிரமுகர்கள், வருகை தந்தால், முதலில் தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும்.. முக்கிய பிரமுகர்கள் பிரதான அரசு நிகழ்வுகளின் போதும், மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிலும், விஐபி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முடிவுகள்: அமித்ஷா வந்தபோது ஏற்பட்ட கரண்ட் கட்டால், இத்தனை களேபரங்களும், சர்ச்சைகளும், அதையொட்டிய முக்கிய முடிவுகளும் அடுத்தடுத்து அப்போது வெளியாகியிருந்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா.. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தொடங்கிவைக்கிறார். பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இரவு தங்குகிறார்.. இதையடுத்து, அமித்ஷா பங்கேற்கும் இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க மின் வினியோக பணியில் முழு கவனம் செலுத்துமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு: இதற்காக மின் வழித்தடங்கள் துணை மின் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் கூடுதல் பொறியாளர்களும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications