பாட்டில் மூடியை உடைக்கிறீங்களா.. முதல்ல இந்த உதையைப் பாருங்க பாஸு...!
Recommended Video
சென்னை: பாட்டில் மூடியை உடைக்கும் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. ஆனால் அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது இந்த யானை விட்ட உதை.
நாட்டில் பொழுது போகாவிட்டால் ஏதாவது ஒரு சவாலை கையில் எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் வெட்டிப் பொழுது போக்குவது இப்போதைய லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது.

அந்த வகையில் இப்போது வைரலாகி வருவது காலால் உதைத்து பாட்டில் மூடியைத் தகர்ப்பது. இதை நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் போட்டி போட்டு செய்து வீடியோ போட்டு எப்பூடி என்று கேட்டு கொண்டுள்ளனர். நல்லாத்தான் இருக்கு பார்க்க.. பிசியான வாழ்க்கையில் இதுபோன்ற ஜாலி போட்டிகளும் அவசியம்தானே.
When you find out the mole that's been spreading lies about you.. pic.twitter.com/rtGopYFjsB
— Preeja Prasad (@preejap13) July 5, 2019
சரி அதை விடுங்க. முடிஞ்சவங்க மூடியைத் திறக்கட்டும்.. இந்த யானையைப் பாருங்க.. இது பாட்டில் மூடி போட்டிக்கெல்லாம் பெப்பே கொடுப்பது போல பேக் சைட் காலால் ஒருவரை விட்ட உதை இருக்கே.. இதுவும் வைரலாகி வருகிறது. உதைபட்டவர் எப்படி போய் விழுகிறார் பாருங்க. கேரள யானை போல... இந்த வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது.. பழசுதான்.. ஆனால் பாட்டில் மூடி சவாலுக்கே இது பெரிய சவாலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications