சென்னையில் வேற லெவலில் உயர்மட்ட மேம்பாலம்! அதுவும் 4 வழிச்சாலை.. பணி எப்போது தொடங்கும்.. இதோ அப்டேட்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் அண்மையில் வெளியான நிலையில், 4 வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் கட்டப்படும் பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. எந்த சாலைகளை பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்வதை காண முடியும். அதுவும் பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். சென்னையின் மையப்பகுதி என்று சொல்லக்கூடிய அண்ணா சாலையில் வரிசை கட்டி வாகனங்கள் நிற்கும்.

அதுவும் தேனாம்பேட்டை சிக்னலை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரூ. 621 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை -சைதாபேட்டை இடையே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமாக இது அமைகிறது. வரும் ஜனவரியில் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் தொடங்கும் போது அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஏற்கனவே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ள பகுதியிலேயே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் நான்கு வழிச்சாலைகளாக இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாசாலையை பொறுத்தவரை சென்னையின் இதயபகுதி என்று சொல்லலாம்.

பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, பின்னி சாலை, ஸ்பென்சர் பிளாசா, ஒயிட்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர் தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் படேல் சாலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அண்ணா சாலையில் சந்திக்கின்றன.
எனவே 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் பரபரப்பான இந்த சாலையில் அமைய இருக்கும் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது.. இதனால் பயணிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா சாலையில் உயர்மட்ட மேம்பாலாமாக நான்கு வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications