நம்ம சென்னைதான் கெத்து! ஹைபர்லூப் டெக்னிக்கில் எலான் மஸ்க்கையே அதிர வைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்
சென்னை: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்த ஹைபர்லூப் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில்தான் செல்லுமாம், ஆனால் சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாகிய ஹைபர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம்.
ஒரு வெற்றிடம் கொண்ட பைப் வழியாக ரயிலை இயக்கினால் 350 கி.மீ. தூரத்தை அரை மணி நேரத்தில் கடக்கும் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 30 நிமிடங்களில் செல்லலாம். ஐஐடி மெட்ராஸின் மாணவர்கள் குழு படைத்துள்ள அவிஷ்கர் ஹைப்பர்லூப் என்ற இந்த ஆராய்ச்சித் திட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்திய ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் சார்பில் இந்தியா சார்பில் ஐஐடி மெட்ராஸ் குழு இறுதி போட்டி வரை முன்னேறியது. இதில் அவர்கள் விருதையும் வாங்கியுள்ளனர். இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்பது மின்னல் வேக டெக்னிக் ஆகும். காற்றில்லாத ஒரு குழாயை உருவாக்கி அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
காற்று புகாத வெற்றிடத்தில் பயணிக்கும் போது மின்னல் வேகத்தில் பயணிக்கலாம். அதிக ஒலியோ காற்று மாசையோ ஏற்படுத்தாது. விமான நிலையங்கள் போல் இதற்கென பிரத்யேக உள்கட்டமைப்புகள தேவையில்லை. விமானத்தின் வேகத்தில் செல்லும். வெற்றிக்குழாயில் ஹைப்பர்லூப்பில் மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம்.
இந்த தொழில்நுட்பத்தில் முதல் ரயிலை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் சில மாதங்களிலேயே சோதனையை இந்த மாணவர்கள் வெற்றிகரமாக செய்துவிட்டனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்தான் இந்த தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தினார். அவரது நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட ஹைபர்லூப் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் செல்லும்.
ஆனால் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் ஹைபர்லூப் டெக்னிக்கால் 1200 கி.மீ. வேகத்தில் செல்லலாம். இதனால் எலான் மஸ்க்கையே இந்த மாணவர்கள் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்கள் என சொல்லலாம். இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ8.34 கோடி நிதியை ஐஐடி மெட்ராஸுக்கு ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications