என் புள்ளையும் ஒரு வாலில்லா குரங்குதாங்க.. தமிழக ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோவுக்கு எலான் மஸ்க் ரியாக்ஷன்
சென்னை: தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவின் வீடியோவிற்கு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
டெஸ்லா சிஇஓவாக உள்ளவர் எலான் மஸ்க். உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளவர். ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இவர் போடும் ஒவ்வொரு ட்வீட்டும் நிறைய வைரலாகும். அது போல் நெட்டிசன்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளிப்பதையும் எலான் மஸ்க் வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் கூட இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலை எப்போது தொடங்கப்படும் என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.
Recommended Video
இவர் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹுவின் ஒரு ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ளார். வனம், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்து வருகிறார். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் விஷயங்கள் குறித்தும் அதற்கான ரீபிளேஸ்மென்ட் குறித்தும் அவர் விழிப்புணர்வு கொடுத்து கொண்டே இருப்பார்.

அட்டகாசம்
காட்டில் விலங்குகள் செய்யும் சேட்டைகள், அட்டகாசங்கள், அரவணைப்பு, பாச போராட்டம், அன்பு, காதல் உள்ளிட்டவற்றை மிகவும் ருசிகரமாக ட்விட்டரில் சொல்ல கூடியவர். இவர் கடந்த 2020 ஆம் ஆணடு "The Nature of Play- Great Apes and Humans" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பொறியாளர் ஒருவர் தற்போது வைரலாக்கினார்.

வீடியோ
அவர் தனது ட்விட்டரில் கூறுகையில், வாலில்லா குரங்குகளும் மனிதர்களும் எப்படி விளையாட்டை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கான மிக அறிவுப்பூர்வமான உதாரணம். கொரில்லாக்களும் மற்ற விலங்குகளும் எப்படி நம்மை போல் விளையாடுகின்றன. எப்படி நாம் செய்வதை அப்படியே செய்கின்றன என்பதையும் அந்த வீடியோ காட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
|
விளையாடும் வாலில்லா குரங்கு
அந்த வீடியோவில் ஒரு குட்டி வாலில்லா குரங்கு ஒன்று சிறிய சுவற்றின் மேல் நின்று கொண்டு அதன் கீழே வைக்கோல் நிரப்பிய சிறிய பள்ளத்தில் குதித்து குதித்து விளையாடுகிறது. பின்னர் தத்தி தடுமாறி அந்த சுவற்றின் மீது ஏறி குதிக்கிறது, ரசிக்கிறது, பின்னர் மீண்டும் குதிக்கிறது. அப்போது அதன் அம்மா வந்து அலேக்காக தூக்கி செல்கிறது. இப்படித்தான் இன்றைய வீடுகளில் குழந்தைகள் இது போல் சேட்டை செய்வார்கள். எங்கேயாவது குதித்து குதித்து விளையாடுவார்கள், அம்மாக்கள் வந்து எச்சரித்துவிட்டு தூக்கி செல்வார்கள்.

ஆண் குழந்தை
இந்த ட்வீட்டிற்கு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அவரது ட்வீட்டில் ஹா ஹா என் குழந்தை எக்ஸும் இப்படித்தான் செய்வான் என பதில் அளித்திருந்தார். அதாவது எலான் மஸ்கின் குழந்தையும் அந்த குட்டி குரங்கை போல் நிறைய சேட்டைகளை செய்வான் என்ற அர்த்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கனடா நாட்டு பாடகி கிரிம்ஸ் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

எலான் மஸ்கின் குழந்தையின் பெயர்
அந்த குழந்தைக்கு X Ash A 12 என்ற பெயரை வைத்திருந்தார். இந்த பெயரை எப்படி உச்சரிப்பது என அப்போது மண்டையை பிய்த்து கொண்டனர். பின்னர் மஸ்கின் மனைவி கிரிம்ஸே அதற்கான அர்த்தத்தையும் எப்படி உச்சரிப்பது என்பதையும் குறிப்பிட்டார். எக்ஸ் என்பது ஒரு வேரியபிள், Æ என்பதை ஆஷ் என உச்சரிக்க வேண்டும். A-12 என்பது சிஐஏவுக்கு தயார் செய்யப்பட்ட விமானத்தின் பெயர், இதை ஆர்சென்ஞ்சல் 12 என அழைக்கலாம். எனவே மஸ்கின் குழந்தையின் பெயரை X Ash Archangel Twelve என்று அழைக்கலாம் என விளக்கியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications