முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்! எக்ஸில் விளக்கமளித்த மெட்டா நிறுவனம்.. கிண்டல் செய்த எலான் மஸ்க்!
சென்னை: உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்களின் சேவைகள் முடங்கி உள்ளன. இதுபற்றி எக்ஸ் பக்கத்தில் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்த நிலையில் எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனம் மெட்டா. இந்த நிறுவனம் தான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், மெசெஞ்சர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிற. இன்று இரவு 8.45 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்கள் திடீரென்று செயலிழந்தன.

ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தால் தானாகவே ‛லாக் அவுட்' ஆகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தால் முகப்பு பக்கம் தெரியாமல் உள்ளது. Refresh செய்தாலும் கூட Couldn't Refresh feed என வருகிறது. அதேபோல் எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைதளத்துக்கு போட்டியாக தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் வலைதள பக்கமும் முடங்கி உள்ளது. த்ரெட்ஸ் பக்கத்தை திறந்தால் ‛Sorry, Something went Wrong. Try Again' என வருகிறது.
இதனால் இந்த 3 வலைதள பக்கங்களையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மெட்டா நிறுவனத்தின் முக்கிய சர்வரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மெட்டா நிறுவனத்தை நெட்டிசன்கள் எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனால் எக்ஸ் பக்கத்தில், Instagramdown, facebookdown உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்ட்டிங்கில் உள்ளன. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை கோபமாக வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கிடையே தான் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அண்டி ஸ்டோன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் மக்கள் பிரச்சனையை எதிர்கொள்வதை நாங்கள் அறிந்துள்ளோம். அந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் பணி செய்து வருகிறோம்'' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் செய்தி தொடர்பாளர் அண்டி ஸ்டோன் பதிவை சுட்டிக்காட்டி எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். அதாவது தொழில் அடிப்படையில் மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்கள் எதிரும் புதிருமாக உள்ளன. இந்நிலையில் தான் எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், மெட்டா நிறுவன செய்தி தொடர்பர் அண்டி ஸ்டோன் பதிவை இணைத்து தனது பக்கத்தில் 4 பென்குவின் பறவைகளை வைத்து கிண்டல் செய்துள்ளார்.
இதில் 3 பென்குவின் பறவைகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அந்த பறவைகள் சோகமாக தலையில் கை வைத்துள்ளன. மாறாக எலான் மஸ்க்கின் எக்ஸ் பக்கத்தை குறிக்கும் வகையிலான பென்குவின் பறவை கண்ணாடி, தொப்பி அணிந்து மாஸாக நிற்கிறது. அதாவது எனது வலைதள பக்கம் சிறப்பாக இயங்குகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் செயலிகள் முடங்கி உள்ளன. அதுபற்றிய விளக்கத்தை கூட மெட்டா நிறுவனம் வழங்க நான் உரிமையாளராக உள்ள எக்ஸ் பக்கத்தை தான் பயன்படுத்துகிறது உணர்த்தும் வகையில் இந்த பதிவை செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரது பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications