டெட்டி பியரில் இருந்து வந்த உயிரிழந்த அம்மாவின் குரல்! கதறி அழுத 12 வயது சிறுவன்! நெகிழ்ச்சி சம்பவம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் 12 வயது சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் திடீரென வைரலாகி உள்ளது.
அம்மாவின் பாசத்தையும் அன்பையும் யாராலும் நிகர் செய்ய முடியாது. சின்ன குழந்தையாக இருந்தாலும் சரி, வளர்ந்த பின்னரும் சரி தாயின் அன்பையே பிள்ளைகள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
இனிமேல் தாயின் அன்பே கிடைக்காது என்று இருக்கும் பிள்ளைகளுக்கு திடீரென அது மீண்டும் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் இப்போது பிரிட்டனில் நடந்துள்ளது.

பிரிட்டன் சிறுவன்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த சிறுவன் பிரென்னன் மான்செல். குழந்தை முதலே பிரென்னன் தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து வந்தார். அவரது அம்மா எங்குச் சென்றாலும் கூடவே இவரும் சென்று விடுவாராம். சிறு வயதில் இருந்தே அம்மா என்றால் இவருக்கு உயிர். ஆனால், எதிர்பாராத விதமாக இவரது அம்மா லிசாவுக்கு கடந்த மாதம் திடீரென மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

உயிரிழப்பு
இதற்காக அவர் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். இருப்பினும், அது எதுவும் அவர்களுக்கு உதவவில்லை. எதிர்பாராத விதமாகக் கடந்த மாதம் லிசா உயிரிழந்தார். இத்தனை ஆண்டுகள் கூடவே இருந்த தாய் திடீரென உயிரிழந்ததை பிரென்னனால் ஜீரணிக்க முடியவில்லை. தாயார் இறந்ததில் இருந்து மிகவும் சோகமாகவே காணப்பட்டார். இந்தச் சூழலில் தான், அவருக்குச் சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது.

கிப்ட்
அப்போது அவரது மூத்த சகோதரி பிரியோனி கிப்ட் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதை முதலில் வழக்கமான டெட்டி பியர் என்றே பிரென்னன் முதலில் நினைத்தான். இருப்பினும், அதில் இருந்து வந்த குரல் அவரை கதறி அழ வைத்துவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு, தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தாயாரின் குரல் அந்த டெட்டி பியரில் கேட்டுள்ளது. திடீரென அம்மாவின் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் அச்சிறுவன் கதறி அழுத வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

அம்மா குரல்
இந்த வீடியோவில் டேடி பியரில் இருந்து "ஹலோ டார்லிங், லவ் யூ லாட்ஸ், லவ், லவ், லவ் லவ் யூ" என்று அவர்கள் தாயின் குரல் கேட்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அச்சிறுவனின் தாயார் அனுப்பிய வாய்ஸ் நோட்டை கொண்டு இந்த டேடி பியரை அவரது அக்கா வடிவமைத்து உள்ளார். உயிரிழந்த அம்மாவின் குரலைக் கேட்டு அச்சிறுவன் கொடுத்த ரிஆக்ஷன் தான் இப்போது நெட்டின்சன்களை நெகிழ்ச்சியில் தள்ளி உள்ளது.

வைரல்
இந்த நெகிழ்ச்சி வீடியோ டிக்டாக் தளத்தில் வெளியான சில மணி நேரத்திலேயே உடனடியாக வைரலானது. பலரும் இந்த வீடியோவை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து வருகின்றனர். இருந்த போதிலும், சிலர் இந்த வீடியோவில் அச்சிறுவனின் ரிஆக்ஷனை கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள அச்சிறுவனின் சகோதரி, இதுபோன்ற ஒன்றைக் கிண்டல் செய்ய எப்படி தான் மனசு வருகிறதோ என நொந்து கொண்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications