"பொங்கிய" காளியம்மாள்.. வாய வெச்சிட்டு சும்மா இருக்கணும்.. ஸ்டாலினே, சீமானை CM ஆக்குவார்.. தேங்க்ஸ்

நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பேச்சின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காளியம்மாள், நிகழ்ச்சி ஒன்றில் திமுக அரசை சரமாரி விமர்சிக்கவும், நாம் தமிழர் கட்சியின் சீமானின் தம்பிகள், அதை வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே திமுக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல் போக்கு துவங்கிவிட்டது.
நாம் தமிழர் மேடைகளில், திமுகவுக்கு எதிராக சீமான் பேச்சுக்களை இந்த முறை இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் சற்று அதிகமாகவே காணப்பட்டது..

 காளியம்மாள்

காளியம்மாள்

இதனால், கொந்தளித்து போன திமுகவினர், நாம் தமிழர் பிரச்சாரங்களில் கல் வீசி எறிந்தும், வாகனங்களை உடைத்தும் தாக்குதல் நடத்தினர்.. இதில் சில நாம் தமிழர் கட்சி தொண்டர்களின் மண்டைகள் உடைந்தன.. அதேபோல, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தபோது, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் பேசிக்கொண்டிருந்தார்.. இவரும் திமுகவை விமர்சனம் செய்யவும், அந்த மேடையிலும் வன்முறை வெடித்தது.. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மது பாட்டில்களை வீசிவிட்டு ஓடி சென்றவர்களில் 2 பேரை பிடித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்று விசாரணையும் நடத்தினர்.

 பொங்கிய காளியம்மாள்

பொங்கிய காளியம்மாள்

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சீமான் கடுமையாக சாடியிருந்தார்.. இந்த விஷயத்தில் திடீரென என்ட்ரி தந்தார் பிரசாந்த் கிஷோர்.. சீமான் பேசிய அந்த வீடியோவை, ட்விட்டரில் வெளியிட்டு, "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா?" என்று காட்டமாக கேட்டிருந்தார்... இதையடுத்து சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 குத்த போனேன்

குத்த போனேன்

இப்படி, நாம் தமிழர் கட்சி மீது, திமுக அரசு தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருவது, அக்கட்சி தொண்டர்களிடையே கடுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அந்த அதிருப்தியைதான், காளியம்மாள் நேற்றைய தினம் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தினார்.. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காளியம்மாள் பேசியபோது, "3 வழக்குகள் என்மீது போடப்பட்டுள்ளது.. என் மீதும் என் அருமைக்குரிய தம்பி இடும்பாவனம் கார்த்திக் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.. அதில் 2வது வழக்கு என்ன தெரியுமா? "கொடூர ஆயுதங்களை கொண்டு, நான் குத்த போனேன்" என்று என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 குத்துவாள்

குத்துவாள்

என் நாக்கு கொடூரமான குத்துவாளாக இருந்திருக்கிறது என்பதையும், என் தம்பியின் நாக்கு கொடூரமான குத்துவாளாக இருந்திருக்கிறது என்பதையும் திமுக இன்று உணர்த்தியிருக்கிறது. தமிழகம் முழுமைக்கும் மிகப்பெரிய போராட்டங்களை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து முன்னெடுத்து கொண்டேயிருக்கிறது.. இதன்மூலம் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது திமுக.. திராவிட மாடலுக்கு தேங்க்ஸ்.. தமிழர்களுக்காக போராடக்கூடியவர்கள் யார் இந்த நிலத்தில் இருக்கிறார் என்பதற்கு, செந்தமிழ்செல்வன் சீமான் என்று திமுக அடையாளம் காட்டியிருக்கிறது.. இதைத்தான், பிரசாந்த் கிஷோரும் சீமானை அடையாளப்படுத்தி காட்டி உள்ளார்..

 ரூ.400 கோடி

ரூ.400 கோடி

400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு, தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினை உருவாக்கிவிட்டவர் இந்த பிரசாந்த் கிஷோர்.. ஆனால், நாங்கள் 4 ரூபாய் கூட கொடுக்கல.. இருந்தாலும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக எங்கள் அண்ணன் சீமானை, ஸ்டாலினே கூடிய சீக்கிரம் உருவாக்கிவிடுவார். ஏன்? ஏனென்றால் வாயை வெச்சிட்டு சும்மா இருக்கணும்.. வழக்கு போட்டதும், நாங்கள் ஒரு மூலையில் பயந்து போய் உட்கார்ந்துவிடுவோமா? அல்லது கைது செய்ய தூக்கிட்டு போகும்போது, "ஐயோ என்னை கொல்றாங்களே, என்னை கொல்றாங்களே" என்று கத்தக்கூடிய கூட்டமா நாங்கள்?

 பொம்பளை பிள்ளை

பொம்பளை பிள்ளை

ஒரு பொம்பளை பிள்ளை மேடையில் ஏறி பேசினதைகூட, இந்த திமுகவால் சகிச்சுக்க முடியாமல், பாட்டிலை விட்டு அடிக்கிறீங்க.. இப்போ எங்காவது இங்கே பாட்டிலை கொண்டுவந்து வெச்சிருக்கீங்களா? மீண்டும் சொல்கிறோம், இந்த நிலம் எங்களுக்கானது.. நாங்கள் ஒன்றும் விஜயநகர பேரரசை நடத்தவில்லை.. இந்த மண் எங்களுடையது.. இந்த வளம் எங்களுடையது.. நாங்கள் இருக்கும்வரை தமிழர் நிலத்தில் ஒருபிடி மண்ணைகூட, மறைமுகமாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் திமுகவையோ, அல்லது மத்தியில் ஆளக்கூடிய நிறுவனங்களையோ அள்ள விட மாட்டோம்.. இங்கே படித்தவர்களுக்கு வேலை இல்லை. ஆனால், தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகையால் யாருமே பாதிக்கப்படவில்லை என்கிறார்கள்..

 ஆரியம் + திராவிடம்

ஆரியம் + திராவிடம்

அப்படியானால், சீமான் தவறாக பேசிவிட்டாரா? பிப்ரவரி 15ம் தேதி சீமான் பேசினாராம்.. அதுக்கு மார்ச் 13ம் தேதி வழக்கு போடறாங்க.. இந்த ஒரு மாசமாக இவங்க எல்லாரும் கோமாவில் இருந்திருக்காங்க.. இதுக்கு 40 வழக்கறிஞர்கள், அதுவும் தலைமை வழக்கறிஞர் வேற.. இவங்களே எல்லாரும் ஒன்னுகூடி பேசிட்டாங்க.. ஒருத்தர் அங்கே ட்வீட் போடறதும், அதுக்கு, சீமான் மேல வழக்கு போட்டுட்டோம்ன்னு அவங்க பதில் சொல்றதும், மீண்டும் அவர் அதுக்கு நன்றி சொல்றதும்.. என்ன இதெல்லாம்? இந்த கமல் இருக்காரே, கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல, ஆரியம் பாதி - திராவிடம் பாதி.. மொட்டையை மட்டும் போட்டுக்குங்க.. நல்லா வட்டமாயிருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+