சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.800 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மாநகரம் விரிவடைய, விரிவடைய பல அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. 1975களில் இருந்த அரசு நிலங்களையும், இப்போது அரசு வசம் உள்ள நிலங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த வித்தியாசம் நிச்சயம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மிக அதிகம்.

குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆறுகள், குளங்கள், ஓடைகள், நீர் வழித்தடங்கள், அரசின் நத்தம் புறம்போக்கு நிலங்கள் வேட்டையாடப்பட்டன. 2000த்திற்கு பிறகு ஐடி நிறுவனங்களின் வருகை மற்றும் அவற்றின் அசுர வளர்ச்சிக்கு வருகைக்கு பின்னர், சென்னையின் வளர்ச்சி மிக அசுர வேகத்தில் இருந்தது. புதிய தலைமுறை பட்டதாரிகள் பலர் ஐடி வேலைகளில் சேர்ந்தார்கள்.
அப்படி வேலைக்கு சேர்ந்த பலருக்கும் பல ஆயிரங்களிலும். லட்சங்களில் சம்பளம் வந்தது. இதனால் திடீரென சென்னைக்குள் நிலத்தின் தேவை பன்மடங்கு அதிகரித்தது. அதேபோல் சென்னைகுள்ளேயே வீடு வேண்டும் என மக்கள் விரும்பியதால், அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவை அதிகரித்தது. இதனால சென்னையின் மிகப்பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்த அதேநேரம், ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன.
சென்னையின் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள், ஓடைகளை ஆக்கிரமித்தவர்கள் பலர் வீடுகளை கட்டினார்கள். சென்னையில் காணாமல் போன ஏரிகளின் லிஸ்ட் மிகப்பெரியது. இன்று உள்ள மிகப்பெரிய ஏரிகளின் பரப்பளவும் பாதிக்குமேல் சுருங்கி உள்ளது. சென்னையில் பல நீர் நிலை ஆக்கிரமிப்புகள் இப்போது முறைப்படுத்தப்பட்டு விட்டன.
ஆனால் சென்னையில் 2015 வெள்ளம் மிகப்பெரிய பாடத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தது. அதன் காரணமாக சென்னையில் நீர்நிலைகளில் வீடு கட்டியவர்கள், நீர் நிலை வழித்தடங்களை மறைத்து வீடு கட்டிய பலர் நொந்து போனார்கள். ஏனெனில் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவிற்கு சென்னை வெள்ளம் பேரழிவினை ஏற்படுத்தியது. அதன்பிறகே தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடிவு செய்தது.
2015க்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு என்பது அப்படியே நின்றது. அதநேரம் ஏற்கனவே ஆக்கிரமித்தவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது. சென்னையில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வாங்குவது மிக கடினமான ஒன்றாக மாறி உள்ளது. ஆக்கிரமித்த பல ஆயிரம் கோடி நிலங்கள் சென்னையில் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளன.
சென்னையில் எம்எல்ஏ, எம்பி, அரசியல் பிரமுகர்கள், மிகப்பெரிய சங்கங்கள், செல்வாக்கான நபர்கள் என யார் ஆக்கிரமித்திருந்தாலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.இதற்கு முக்கிய காரணம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகள். ஆக்கிரமிப்பு நிலங்கள் எத்தனை வருடம் ஆனாலும், அவற்றை சீல் வைத்து அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்ததே உயர்நீதிமன்றம் தான். உயர்நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளால் சென்னையில் இன்று ஆக்கிரப்பு நிலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசும், ஆக்கிரமித்தவர்களை அதிரடியாக வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக, அந்த நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து இயங்கி வந்த, அரசுடைமை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications