வில்லங்க சான்றிதழில் இனி வில்லங்கமே வராது.. தமிழக அரசு நச்.. ஆன்லைன்லயே வில்லங்க சான்று ஈஸியா பெறலாம்
சென்னை: பத்திரப்பதிவு அலுவலகத்துக்கே போகாமல், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வில்லங்க சான்றிதழை பெறுவது எப்படி தெரியுமா? அதற்கான வழிகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
வில்லங்கம்: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்..
வில்லங்க சான்றிதழ்: தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை.
1950 முதல் 1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்க சான்றுகளை இணைய வழியில் கணினியில் பதிவேற்றம் செய்ய, 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடையும் தமிழக அரசு செய்துள்ளது. 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி சமீபத்தில்கூட அறிவித்திருந்தார்.
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி?
- முதலில், தமிழக பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை தர வேண்டும். இதில், வில்லங்க சான்றிதழை இலவசமாகவே பார்க்கலாம்.
- வில்லங்க சான்று பெறு வேண்டுமானால், அதே லிங்க்கில் "Apply online" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது விண்ணப்ப படிவம் ஒன்று வரும்.. அதில் உங்களது பெயர், போன் நம்பர், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்- பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி, மாதம், எத்தனை வருடங்களுக்கு வில்லங்க சான்றிதழ் தேவை என்ற பல விவரங்களை பதிவிட வேண்டும்.
- அடுத்து பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் போன்ற தகவல்களை பதிவிட வேண்டும்.
- பிறகு கேப்ட்சா பதிவிட வேண்டும். இப்போது வில்லங்க சான்று விவரங்களை ஸ்கிரீனில் பார்க்கலாம்.. PDF வடிவில், இந்த வில்லங்கச் சான்று விவரங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.. இலவசமாகவே பெறலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications