வில்லங்கச் சான்றிதழ் அவசியம்.. சொத்து பரிமாற்றம் குறித்து தமிழக பதிவுத்துறைக்கு பெயிரா தந்த கோரிக்கை
சென்னை: வில்லங்க சான்றிதழில் நடைபெற்ற சொத்து பரிமாற்றம் சம்பந்தமான விபரங்கள் மட்டுமல்லாமல், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரையுள்ள குறிப்பிட்ட சொத்து சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள் அனைத்தும் இடம் பெறும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என்று பதிவுத்துறைக்கு பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பத்திர பதிவு நடைபெற்ற நாளன்று, வில்லங்கச் சான்று வழங்கும் வசதியை பாராட்டியிருந்தார்.. இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பதிவுத்துறைக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதன் விவரம் இதுதான்:

பத்திரப்பதிவு
பதிவுத்துறை தமிழ்நாடு முழுவதும் 11 மண்டல அலுவலகங்கள், 56 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 582 சார் பதிவாளர் அலுவலகங்களென இயங்கி வருகின்றது. மேற்கண்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பதிவுத்துறை பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளையும் எளிதாகவும், விரைவாகவும் தற்போது ஸ்டார் 2.0 மென்பொருள் வாயிலாக வழங்கி வருவதுடன், பத்திர பதிவு பணிகள் நிறைவடைந்த தினத்தன்றே சொத்து குறித்த கள ஆய்வு தேவைப்படும் பத்திரங்களை தவிர்த்து, மற்றனைத்து பத்திரங்களையும் அதே நாளில் வழங்கிட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டார் 2.0 மென்பொருள்
பதிவுத்துறையின் பணிகள் தற்போது ஸ்டார் 2.0 மென்பொருள் வாயிலாக விரைந்து நிறைவடைந்தாலும், சம்பந்தப்பட்ட நபர் தனது சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்கச் சான்றினை பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய பதிவுத்துறையின் இணையத்தில் பல கட்டங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தேவையான தகவல்களை பூர்த்தி செய்து பெற வேண்டியதின் காரணமாக பாமர மற்றும் சாமானிய மக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தங்களுக்கான சொத்து பரிமாற்றங்கள் குறித்த வில்லங்கச் சான்றினை பிறர் உதவியின்றி பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்யயியலாத சூழல் நிலவி வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் பதிவுத்துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள இத்திட்டத்தின்படி பத்திர பதிவு நடைபெற்ற தினத்தன்றே சம்பந்தப்பட்ட நபரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் (Link) வாயிலாக சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றினை இலவசமாக பெற முடியும்.
வில்லங்க சான்றிதழ்
மேலும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் இணைப்பு (Link) 30 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டடுள்ளதன் காரணமாக இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கான திட்ட அனுமதி, சொத்து வரி, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பிற்கான பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
இத்திட்டத்தினை பெயிரா கூட்டமைப்பு மனம் திறந்து பாராட்டி வரவேற்பதுடன், கூடுதல் கோரிக்கையாக வில்லங்கச் சான்றில் சமீப காலங்களில் நடைபெற்ற சொத்து பரிமாற்றம் சம்பந்தமான விபரங்கள் மட்டுமல்லாமல், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரையுள்ள குறிப்பிட்ட சொத்து சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள் அனைத்தும் இடம் பெறும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications