காவேரிக்கு போவாங்க.. காபி குடிப்பாங்க! ரிப்பீட்டு! செந்தில் பாலாஜியை விசாரிக்கலை! துஷார் மேத்தா கலகல
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை, இதனால் அங்கு சென்ற அமலாக்கத் துறையினர் காபி மட்டுமே குடித்துவிட்டு வந்தனர் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் துஷார் மேத்தா வாதம் செய்தார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது பண மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜியின் வீட்டில் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அவரை கைது செய்தனர். ஆனால் எதற்காக கைது செய்கிறார்கள் என தனது கணவரிடமோ உறவினர்களிடமோ அமலாக்கத் துறை அதிகாரிகள் சொல்லவில்லை என அவருடைய மனைவி மேகலா கூறுகிறார்.
எனவே சட்டவிரோத கைதை எதிர்த்து ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை மேகலா தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் செந்தில் பாலாஜி சார்பில் திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கு ஏற்கெனவே 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். கைதுக்கான மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்த பதிவுகள் இல்லை.
இரவு 1.39 க்கு கைது செய்தது குறித்த தகவல் காலை 8.12 க்குத் தான் தெரிவிக்கப்பட்டது என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்தது. அதே வேளையில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, தனது வாதத்தில் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம்.
தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் நீதிமன்ற காவல் நீடிக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்க முடியும். இந்த நிபந்தனையால் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்த முடியவில்லை. காபி மட்டுமே சாப்பிட்டு வந்தனர் என துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications